தமிழ் சினிமாவில் இது இல்லைனு நினைக்கிறீங்களா…? லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டம்…

By Meena

Published:

லட்சுமி ராமகிருஷ்ணன் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் குணச்சித்திர நடிகை மற்றும் இயக்குனர் ஆவார். இவர் பயிற்சி பெற்ற ஆடை வடிவமைப்பாளரும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நடத்தும் நிகழ்வு மேலாளரும் ஆவார். 1992 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை ஓமனில் மஸ்கட் நகரில் நிகழ்வு வேளாண்மை பிசினஸை நடத்தி வந்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

2006 ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார் லட்சுமி ராமகிருஷ்ணன். 2008 ஆம் ஆண்டு கரு பழனியப்பன் அவர்களின் திரைப்படமான பிரிவோம் சந்திப்போம் என்ற திரைப்படத்தில் சினேகாவின் தாயாராக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

தொடர்ந்து பொய் சொல்ல போறோம், ஈரம், நாடோடிகள், சிரித்தால் ரசிப்பேன், வேட்டைக்காரன், விண்ணைத்தாண்டி வருவாயா, நான் மகான் அல்ல, பாஸ் என்கிற பாஸ்கரன், யுத்தம் செய், இரவுக்கு ஆயிரம் கண்கள், திமிரு பிடித்தவன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

சினிமா தவிர சின்னத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பேச்சுப்போட்டி நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை 1500 எபிசோடுகளுக்கு மேல் தொகுத்து விளங்கி நடத்தியவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இது தவிர 25க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்து பிரபலமானவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

2012 ஆம் ஆண்டு ஆரோகணம் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமான லட்சுமி ராமகிருஷ்ணன் நெருங்கி வா, முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் ஆகிய திரைப்படங்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஒரு பேட்டியில் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் மலையாள திரை உலகில் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழ் திரையுலகை பற்றியும் காட்டமாக பேசியுள்ளார்.

அவர் கூறியது என்னவென்றால், இப்போதைய விஜய் அஜித் தலைமுறைக்கு முந்தைய தலைமுறையில் நடித்த நடிகர்கள் பெண்கள் விஷயத்தில் ஒழுக்கமாக இருந்துள்ளார்களா? அவர்களால் நாங்கள் ஒழுக்கமாகத்தான் இருந்தோம் என்று தைரியமாக சொல்ல முடியுமா? தமிழ் திரை உலகிலும் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று காட்டத்துடன் கோபத்துடன் பேசி இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.