மோகன்லால் உள்ளிட்ட மலையாள நடிகர் சங்க உறுப்பினர்கள் ராஜினாமா… ஆவேசமாக நடிகை பார்வதி கூறிய வார்த்தை…

Published:

நடிகை பார்வதி கேரளாவில் கோழிக்கோடில் பிறந்து வளர்ந்தவர். ஆங்கில இலக்கியம் படித்து முடித்த பார்வதி திருவனந்தபுரத்தில் உள்ள முழுநேர இசைச் சேனலான கிரன் டிவியில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார். இவர் பயிற்சி பெற்ற நடன கலைஞரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வதி தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். 2006 ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் பார்வதி. 2008 ஆம் ஆண்டு பூ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது முதல் படத்தின் மூலமாக தனது எதார்த்தமான நடிப்பிற்காக அனைவரின் பாராட்டையும் பெற்றார் பார்வதி.

அடுத்ததாக பெங்களூர் நாட்கள், சார்லி, மரியான், தற்போது தங்கலான் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் பார்வதி. தனது நடிப்பிற்காக தேசிய திரைப்பட விருது, 5 பிலிம்பேர் விருதுகள், மூன்று சைமா விருதுகள் மற்றும் இரண்டு கேரள மாநில திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.

சமீபகாலமாக மலையாள சினிமா வட்டாரங்கள் சம்பந்தமாக வரும் செய்திகள் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே பரபரப்பாக்கியுள்ளது. எல்லோரின் கவனமும் மலையாள சினிமாவின் மீது இருக்கின்றது. இதற்கு காரணம் என்னவென்றால் மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் ரீதியான கொடுமைகள் நடக்கிறது என்பதை ஹேமா கமிட்டி குழு உறுதி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்ததன் எதிரொலியாக மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிகர் சங்க பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.

இது சம்பந்தமாக நடிகை பார்வதி ஆவேசமாக பேசியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால் நடிகர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்ததால் அதற்கு சரியான பதிலளிக்க வேண்டும். விசாரணை நடத்தி உண்மை என்னவென்று கண்டறிய வேண்டும். அதை விட்டுவிட்டு அனைவரும் ராஜினாமா செய்வது, கோழைத்தனம் என்று கோபத்துடன் பேசி இருக்கிறார் பார்வதி.

மேலும் உங்களுக்காக...