வழுக்கைத் தலை போதும்.. அப்படியே வாங்க.. சிங்கம்புலிக்கு எகிறும் மார்க்கெட்

By John A

Published:

இயக்குநர் சுந்தர் சி-யிடம் உதவியாளராகப் பணியாற்றி ரெட் படம் மூலம் இயக்குநராக கால் பதித்தவர் தான் இயக்குரும், நடிகருமான சிங்கம்புலி. உன்னைத் தேடி படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து அப்போது அஜீத்துடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக மதுரையை கதைக்களமாக வைத்து அதில் அஜீத்தை நடிக்க வைத்தார். இப்படம் அஜீத்துக்கு பெரிய வெற்றியைத் தந்தது.

மேலும் மதுரை வட்டாரங்களில் அஜீத்தை நிலை நிறுத்தியது. ஏராளமான ரசிகர்கள் அஜீத்துக்கு உருவாயினர். இப்படி முழுக்க முழுக்க அஜீத் ரசிகர்களுக்காக வெளிவந்த ரெட் படத்தினையடுத்து சூர்யாவுடன் மாயாவி படத்தில் இணைந்தார். இப்படி இரண்டு மாஸ் ஹீரோக்களை இயக்கிய சிங்கம்புலி அடுத்ததாக பாலாவுடன் பிதாமகன், நான் கடவுள் ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்தார்.

இவரின் பாடி லாங்குவேஜைப் பார்த்த பாலா அவரை நான் கடவுள் படத்தில் பிச்சைக்காரனாக நடிக்க வைத்தார். இதனையடுத்து ராசுமதுரவன் இயக்கிய மாயாண்டி குடும்பத்தார் படம் இவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அதிலும் குறிப்பாக கிராமத்து நகைச்சுவைக் காட்சிகள் என்றால் சிங்கம்புலியைக் கூப்பிடு என்ற ரேஞ்சில் படுபிஸியாக நடித்தார் சிங்கம்புலி.

ஹெச். வினோத் கேட்ட இரண்டு கண்டிஷன்.. சதுரங்க வேட்டையில் நட்டி (நட்ராஜ்) இணைந்தது இப்படித்தான்.

தொடர்ந்து காமெடி வேடங்களில் கலக்கி வந்தவருக்கு மிஷ்கினின் சைக்கோ படத்தில் குணச்சித்திர நடிகராக வாய்ப்புக் கிடைக்க அதில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து மீண்டும் காமெடியில் நடித்து வந்தவர் தற்போது விஜய் சேதுபதியின் 50-வது படமான மகாராஜா படத்தில் அனைவரையும் கவரும் வண்ணம் நடிப்பில் அடுத்த பரிணாமத்தைத் தொட்டிருக்கிறார்.

பொதுவாக வழுக்கைத் தலை என்றாலே அதை மறைத்து விக் வைத்து நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் தன்னுடைய இந்த தோற்றத்தையே பிளஸ்ஸாக மாற்றியிருக்கிறார். இவர் என்ன கேட்டாலும் ஷுட்டிங்கில் செய்து கொடுக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில் ஒரு விஷயத்தை மட்டும் கேட்டால் செய்து கொடுக்க தயங்குகிறார்களாம். அதுதான் அவருக்கு விக் வைப்பது.

விக் வைத்து நடிக்கிறேன் என்று சிங்கம்புலி கேட்டாலும், இவரை வைத்து படம் எடுக்கும் இயக்குநர்கள் அதை விரும்புவதில்லையாம். இதுதான் காட்சிக்கு இயற்கையாக இருக்கிறது. மேலும் ரசிகர்களுக்கும் பிடிக்கும். எனவே உங்களுக்கு விக் என்பதையே மறந்துவிடுங்கள் என்று அவரிடம் கூறி வருகின்றனராம் இயக்குநர்கள்.