இந்த கண்ணாடி சீனுக்குப் பின்னால இப்படி மேட்டரா.. விக்ரம் படத்தில் மிரட்டிய சத்யராஜ் கெட்டப்

சாதாரணமாக சத்யராஜ் நடிக்கும் படங்கள் என்றாலே லொள்ளுக்குப் பஞ்மே இருக்காது. ஆனால் அவர் நடிக்க வந்த ஆரம்பத்தில் ஏராளமான படங்களில் வில்லன் ரோல்களில் மிரட்டியிருப்பார். பாரதிராஜா கடலோரக் கவிதைகள் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். சத்யராஜ் கமல்ஹாசனுடன் இரண்டு மூன்று படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார்.

குறிப்பாக சட்டம் என் கையில், காக்கிச் சட்டை, விக்ரம் போன்ற படங்கள் சத்யராஜின் வில்லத்தனத்துக்கு சவால் விடுத்த படங்கள் எனலாம். காக்கிச் சட்டை படத்தில் தகடு..தகடு என்று சத்யராஜ் பேசும் வசனம் இன்றளவும் பிரபலமான வசனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

அதேபோல் தான் பழைய விக்ரம் படத்தில் இவரின் காஸ்ட்டியூம். சாதாரணமாக கண்களில் அணிந்திருக்கும் கிளாஸ்கள் ஒன்று கூலிங் கிளாஸாக இருக்கும். அல்லது சாதாரண கண்ணாடியாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் சத்யராஜ் அணிந்திருக்கும் கண்ணாடிதான் ஹைலைட்டே. ஒருபக்கம் சாதாரண கண்ணாடியாகவும், மற்றொரு பக்கம் கூலிங் கண்ணாடியாகவும் அணிந்திருப்பார். இவரின் இந்த மேனரிசம் அப்போது ரசிகர்களைக் கவர்ந்தது. கதைப்படி சத்யராஜுக்கு இந்தப் படத்தில் ஒரு கண்ணில் கருப்பு விழியே இருக்காது. எனவே இதை மறைக்கவே ஒருபக்கம் கூலிங் கிளாஸ் அணிந்திருப்பார்.

வழுக்கைத் தலை போதும்.. அப்படியே வாங்க.. சிங்கம்புலிக்கு எகிறும் மார்க்கெட்

தனக்கு கருவிழி மூடியிருப்பதை ஒரு காட்சியில் கண்ணாடியைக் கழட்டிக் காட்டுவார் சத்யராஜ். இவ்வாறு கண்ணாடி போடும் ஸ்டைலை சொன்னதே கமல் தானாம். அவரின் ஐடியா இந்தப் படத்தில் சூப்பராக ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. அதேபோல் இதை மாடலாக வைத்தே சத்யராஜ் இயக்கி நடித்த வில்லாதி வில்லன் படத்திலும் பூ கதாபாத்திரத்தில் கண்ணில் பூ விழுந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இதை மாடலாக வைத்தே 2022-ல் இயக்கிய விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கும் ஒரு கண்ணாடியைக் கொடுத்திருப்பார். இவ்வாறு ஆரம்ப காலப் படங்களில் சத்யராஜ் தனது கெட்டப்புகளை மாற்றி பல படங்களில் தனது வில்லத்தனத்தில் ரசிகர்களை மிரட்டியிருப்பார். அதில் நூறாவது நாள் இவருக்கு பெரிய புகழைத் தேடித் தந்தது.