குடும்பங்கள் கொண்டாடும் இயக்குநர்.. அரசியல் படத்தினை எடுத்து கையைச் சுட்ட சம்பவம்..

By John A

Published:

சினிமா இயக்குநர்கள் ஒவ்வொருவரும் ஒருபடம் எடுக்கும் போது முதன் முதலாக எந்த மாதிரியான கதைக் களத்தினையும், மேக்கிங்கையும் தேர்வு செய்து இயக்குகிறார்களோ தொடர்ந்து அதே பாணியில் எடுக்கும் போது சிலருக்கு வெற்றியாக அமைகிறது. சில இயக்குநர்களுக்கு தோல்வியில் முடிகிறது. இவர்கள் மாற்றி எடுத்தாலும் அதுவும் கையைச் சுட்டுவிடுகிறது. இப்படி பிரபல இயக்குநர் ஒருவர் தனது பாணியிலிருந்து சற்று மாறி திரைப்படம் எடுத்து கையைச் சுட்டுக் கொண்ட சம்பவம் நடந்திருக்கிறது. அந்த இயக்குநர்தான் வி.சேகர்.

நீங்களும் ஹீரோதான் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தொடர்ந்து வரவு எட்டணா செலவு பத்தணா, காலம் மாறிப் போச்சு, பொறந்த விடா.. புகுந்த வீடா.., விரலுக்கேத்த வீக்கம் போன்ற படங்கள் மூலம் குடும்பம் குடும்பமாக மக்களை திரையரங்கிற்கு வரவழைத்தவர். பெரிய பெரிய படங்கள் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் போது, சிறிய பட்ஜெட்டில் படங்களைத் தயாரித்து இயக்கி பெரிய படங்களுடன் ரிலீஸ் செய்து அதில் வெற்றியும் கண்டவர். பெரிய படங்களின் வசூலை விட இவரது படங்கள் கல்லா கட்டும்.

இவ்வாறு இந்தியன் படம் ரிலீஸ் ஆகியிருந்த சமயத்தில் இவரின் காலம் மாறிப் போச்சி திரைப்படமும் வெளியானது. பிரம்மாண்ட செலவில் தயாரிக்கப்பட்ட இந்தியன் பட வசூலுக்கு நிகராக குறைந்த பட்ஜெட்டில் குடும்பங்கள் கொண்டாடிய படமாக காலம் மாறிப் போச்சி படம் வசூலை வாரிக் குவித்தது.

பாட்டுப் போட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் கண்டுபிடித்த முத்து.. தேன் குரலில் திகட்டாத பாடல்களை பாடி ஹரிணி

இதனை அறிந்த இந்தியன் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், இயக்குநர் வி.சேகரிடம் தனக்கு ஒரு படம் இயக்கித் தருமாறு கேட்டிருக்கிறார். பிரம்மாண்ட தயாரிப்பாளர் என்பால் வி.சேகர் யோசிக்க, அதற்கு நான் அதிக பொருட்செலவில் எடுத்து குறைந்த லாபத்தை அடைவதைக் காட்டிலும், உங்களைப் போன்று சிறு பட்ஜெட்டில் திரைப்படம் எடுத்து அதிக லாபம் பெறலாம் என்பதற்காக வி.சேகரை இயக்கச் சொன்னார்.

அப்படி உருவான படம் தான் எல்லாமே என் பொண்டாட்டிதான். இந்தப் படத்தின் கதையானது பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிராசாத் யாதவின் வாழ்க்கையொட்டி எடுக்கப்பட்டது. லாலு பிரசாத் ஊழல் குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிட்ட போது தனது மனைவியை அரசியலில் நுழைத்து முதல்வராக்கியவர்.

இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து விஜயசாந்தியை ஹீரோயினாக வைத்து கதை எழுதப்பட்டது. பின்னர் விஜயசாந்தி நடிக்க முடியாமல் போக, அதன் பின் ராதிகா கதைக்குள் வந்திருக்கிறார். எனவே விஜயசாந்திக்காக எழுதிய கதையை அப்படியே மாற்றி ராதிகாவுக்காக மாற்றி எழுதியிருக்கிறார் வி.சேகர்.

இவ்வாறு உருவான எல்லாமே என் பொண்டாட்டிதான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.