பாட்டுப் போட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் கண்டுபிடித்த முத்து.. தேன் குரலில் திகட்டாத பாடல்களை பாடி ஹரிணி

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் எத்தனையோ இளம் பாடகர்களுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறார். இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட பல பாடகர்கள் இன்று புகழ்பெற்ற பின்னணிப் பாடகர்களாக உள்ளனர். இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மானால் அடையாளங் காணப்பட்டு இன்று தென்னிந்திய சினிமாவில் புகழ் பெற்ற பாடகியாக வலம் வருபவர்தான் பாடகி ஹரிணி.

சிறு வயதிலேயே முறைப்படி சங்கீதம் பயின்ற ஹரிணி தனது 14 வயதில் பாட்டுப் போட்டி ஒன்றில் பங்கெடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். அன்றைய தினம் வெற்றியாளர்களுக்கு பரிசளிக்க வந்த ஏ.ஆர்.ரஹ்மான் ஹரிணியின் குரல்வளத்தைக் கண்டு மெய்சிலிர்த்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து சில மாதங்கள் கழித்து ஹரிணிக்கு முதன் முதலாக சுகாசினி இயக்கிய ‘இந்திரா’ படத்தில் நிலா காய்கிறது பாடலை பாட வாய்ப்பளித்திருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். இதனையடுத்து இந்தியன் படத்தில் டெலிபோன் மணிபோல் பாடலை பாட வாய்ப்பு வழங்க அந்தப் பாடல் ஹிட்டானது. அதன்பின் பல இசையமைப்பாளர்கள் ஹரிணியின் குரலைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

தொடர்ந்து ஹரிணி பல ஹிட் பாடல்களைப் பாட ஆரம்பித்தார். இவற்றில் பெரும்பாலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்ததே. அவற்றில் ரட்சகன் படத்தில் சோனியா சோனியா.., ஜீன்ஸ் படத்தில் வாராயோ தோழி.., என் சுவாசக் காற்றே படத்தில் காதல் நயகரா.., முதல்வன் படத்தில் அழகான ராட்சசியே.., என பொன்னியின் செல்வன் படம் வரை இவர்களது பயணம் தொடர்ந்திருக்கிறது.

தம்பிக்காக விட்டுக் கொடுத்த அண்ணன் உதயநிதி.. முதல் படமே ஹிட் கொடுத்து அசத்திய அருள்நிதி..

மேலும் தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், வித்யாசாகர், தேவிஸ்ரீபிரசாத், ஹாரிஸ் ஜெயராஜ்,யுவன், ஜி.வி.பிரகாஷ் என தமிழ் சினிமாவின் சமீபத்தியி இசையமைப்பாளர்கள் அனைவரது இசையிலும் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியிருக்கிறார் ஹரிணி. தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் தோராயமாக சுமார் 3500க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் ஹரிணி.

கோலங்கள் சீரியல் டைட்டில் பாடலும் இவர் பாடியதே. மேலும் தமிழக அரசின் சிறந்த பாடகிக்கான விருதினை பார்த்திபன் கனவு படத்தில் ஆலங்குயில் பாடலுக்காகவும், நேருக்கு நேர் படத்தில் மனம் விரும்புதே பாடலுக்காகவும் பெற்றுள்ளார் ஹரிணி. இவரது கணவர் திப்புவும் புகழ் பெற்ற பின்னணிப் பாடகரே.

அன்று ஏ.ஆர்.ரஹ்மான் காட்டிய பாதையால் இன்று தனது தேன் குரலால் மயக்கும் பாடல்களைப் பாடி இரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார் ஹரிணி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews