அப்பட்டமான காப்பி.. தெலுங்கு படத்தை அப்படியே எடுத்து ஹிட்டாக்கிய சுந்தர்.சி.. எதுக்காக இப்படி செஞ்சாரு தெரியுமா?

By John A

Published:

தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடிப் படங்கள் வந்திருந்தாலும், காமெடிப் படங்களை இயக்கும் இயக்குநர்கள் இருந்தாலும் இயக்குநர் சுந்தர்.சி-யின் காமெடிப் படங்களுக்கு எப்பவுமே தனி மவுசு உண்டு. கவுண்ட மணி, செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம், சூரி, யோகிபாபு, சதீஷ் என அத்தனை காமெடி ஹீரோக்களையும் வைத்து வெற்றி கொடுத்தவர். இப்படி தியேட்டருக்கு வரும் இரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்து கலகலப்பாக மாற்றி அவர்களின் மனநிலையையே மாற்றிவிடும் ரகசியம் தெரிந்தவர்.

இப்படி காமெடியில் வெளுத்து வாங்கும் இயக்குநர் சுந்தர்.சி-யின் படங்களில் உச்சபட்ச காமெடியாக விளங்கிய திரைப்படம் தான் வின்னர். கடந்த 2003-ல் வெளியான வின்னர் திரைப்படம் அதன் காமெடிக்காகவே ஓடியது. கைப்புள்ள கதாபாத்திரத்தில் வடிவேலு செய்த லூட்டிகள் சிரிக்க வைத்து கண்களில் நீரைவரவழைக்கும். இன்றும் மீம்ஸ்களில் கைப்புள்ள இடம்பெறாத காட்சிகள் மிகவும் குறைவே.பிரசாந்த், கிரண், வடிவேலு, ரியாஸ்கான் ஆகியோர் நடித்த இப்படம் தெலுங்கு படத்தின் அப்பட்டமான காப்பி என்றால் நம்ப முடிகிறதா?

இதனை சுந்தர் சி.யே ஒப்புக் கொண்டுள்ளார். எவ்வாறெனில் ஒருமுறை சுந்தர் சி. ஹைதராபாத் சென்றிருக்கும் போது அங்குள்ள தயாரிப்பாளர் ராம்நாயுடுவைச் சந்திருக்கிறார். இந்நிலையில் அவர் நாம் இணைந்து ஒரு படம் தயாரிக்கலாம் நமது தயாரிப்பில் நிறைய வெற்றிப் படங்கள் வந்துள்ளன. அவற்றில் எதையாவது ரீமேக் பண்ணலாமா என்று பாருங்கள் என சில படங்களைப் போட்டுக்காட்டியுள்ளார்.

“உங்க வேலைய மட்டும் பாருங்க.. இனிமேல் இளையராஜாவை சீண்டுனா..” வைரமுத்துவுக்கு எதிராக கோபத்தில் பொங்கிய கங்கை அமரன்

அவர் போட்டுக் காட்டிய படங்களைப் பார்த்த சுந்தர்.சி-க்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அந்தப் படங்களின் இயக்குநர் சுந்தர்.சி இயக்கிய படங்களைப் பார்த்து அப்படியே காப்பியடித்து வைத்திருந்தார். இதனால் ஷாக்கான சுந்தர்.சி. அப்போது ஒரு முடிவு எடுத்திருக்கிறார்.

தனது படங்களைக் காப்பியடித்த தெலுங்கு சினிமா மீது அவருக்கு கோபம் உண்டாகியிருக்கிறது. எனவே அந்தக் கோபத்தில் கிட்டத்தட்ட 10 தெலுங்குப் படங்களின் டிவிடிக்களை பிரசாந்திடம் கொடுத்து பார்க்கச் சொல்லி அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கதைகளை எடுத்து வின்னர் படத்தை உருவாக்கியிருக்கிறார்.

இப்படித்தான் வின்னர் படம் உருவாகியிருக்கிறது. இதில் ஒரு கொடுமை என்னவென்றால் எந்த தெலுங்கு சினிமாவைப் பார்த்து இவர் காப்பியடித்து வின்னர் உருவாக்கினாரோ மீண்டும் வின்னரைப் பார்த்து தெலுங்கிலும் அதேபோல் எடுத்திருக்கிறார்கள் என்பது தான் வேதனையான விஷயம்.