“உங்க வேலைய மட்டும் பாருங்க.. இனிமேல் இளையராஜாவை சீண்டுனா..” வைரமுத்துவுக்கு எதிராக கோபத்தில் பொங்கிய கங்கை அமரன்

அண்மையில் சில காலங்களாக இளையராஜாவுக்கம் வைரமுத்துவுக்கும் இடையே நடந்த கருத்து வேறுபாடுகள் பனிப்போராகத் தான் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று வைரமுத்து ஒரு விழாவில் பேசிய போது அது எரிமலையாய் வெடித்து விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் வைரமுத்துவுக்கு எதிராக கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து மூவருமே தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதில் இளையராஜாவும், பாரதிராஜாவும் 70களின் கடைசியில் சினிமாத்துறையில் தனியாக அடியெடுத்து வைக்க தொடர்ந்து பயணித்து வந்தனர். அப்போது சினிமாவில் வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்த வைரமுத்துவை பாரதிராஜா அழைத்து வந்து இளையராஜாவிடம் அறிமுகப்படுத்தி வைக்க இளையராஜா அவருக்கு நிழல்கள் படத்தில் பொன்மாலைப் பொழுது .. பாடல் மூலம் பாடலாசிரியராக அறிமுகம் கொடுத்தார்.

இவர்கள் மூவர் கூட்டணி தமிழ் சினிமாவில் பல எவர்கிரீன் படங்களைக் கொடுத்தது. மேலும் வைரமுத்துவும் பிரபலமான பாடலாசிரியரானார். ஒருகட்டத்தில் இந்த மூவர் கூட்டணியும் பிரிந்தது. வைரமுத்து இளையராஜாவிடமிருந்து பிரிந்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாட்டெழுத ஆரம்பித்தார். மேலும் இளையராஜாவும் கடந்த சில வருடங்களுக்கு முன் தன்னுடைய இசையில் பாடும் பாடல்களுக்கு ராயல்டி உரிமை கோரி வழக்குத் தொடுத்தார். இதுகுறித்து வைரமுத்து தன் கருத்து ஒன்றைப் பதிவு செய்தார். இப்படி இவர்களுக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் பனிப்போராக நிலவி வந்தது.

இந்நிலையில் நேற்று நடந்த படிக்காத பக்கங்கள் என்ற இலக்கிய விழாவில் கலந்து கண்டு வைரமுத்து பேசிய போது மொழி பெரிதா.. பாட்டு பெரிதா என்பது குறித்து சில கருத்துக்களைப் பேசியிருந்தார். மேலும் இதைப் புரிந்து கொள்பவன் ஞானி. புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என்று மறைமுகமாக இளையராஜாவைத் தாக்கிப் பேசியிருந்தார். இவரது இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் வைரலானது.

எஸ்.ஏ. சந்திரசேகருக்கு ரிவஞ்ச் கொடுத்த எம்.ஜி.ஆர்.. One more கேட்டதால் வந்த வினை

வைரமுத்துவின் இந்தப் பேச்சிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கங்கை அமரன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “எங்களால் சினிமாவிற்கு வந்து, எங்கள் இசையிலேயே பாட்டெழுத ஆரம்பித்து, வளர்ந்து இன்று வந்த இடத்தையே காலில் தூக்கிப் போட்டு மிதிப்பது போன்று பேசியுள்ளார். அவருடைய பாட்டு புகழ் பெற ஆரம்பித்ததும் கர்வம் தலைக்கேறி விட்டது. இதே கர்வம் இளையராஜாவுக்கு தொடர்ச்சியாக எழுதியிருந்தால் வந்திருக்காது.

வைரமுத்து நல்ல கவிஞர் தான். ஆனால் நல்ல மனிதர் கிடையாது. இனிமேல் இளையராஜாவைப் பற்றி ஏதாவது பேசினீர்கள் என்றால் அதற்குரிய பின்விளைவைச் சந்திபீர்கள்” என்று பகீரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார் கங்கை அமரன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...