கற்பனைக் காட்சியில் எதேச்சையாக வந்த விமானம்.. பரபரப்பாகிய படக்குழு.. அசத்தலாக வந்த கமல் பட சூப்பர் சீன்..

By John A

Published:

பாலசந்தர் ஹீரோவாக அறிமுகப்படுத்திய வைரங்களான கமல் மற்றும் ரஜினியை பட்டை தீட்டியவர் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன். 80களின் கமர்ஷியல்கிங் என்று அறியப்பட்ட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தனக்கு நல்ல கதையம்சம் உள்ள படங்களும் எடுக்கத் தெரியும் என்று நிரூபித்து எடுத்த படங்கள்தான் ரஜினிக்கு ஆறிலிருந்து அறுபது வரை. கமலுக்கு ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது.

ரஜினி மற்றும் கமல்ஹாசனை உச்ச நடிகர்களாக்கிய பெருமை இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கு அதிகம் உண்டு. ஏனெனில் இவரது இயக்கத்தில் பெரும்பாலான படங்களில் ரஜினி மற்றும் கமல் நடித்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தனர்.

இந்நிலையில் கமலை வைத்து எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படம் தான் ‘ஒரு ஊதாப் பூ கண் சிமிட்டுகிறது‘. எழுத்தாளர் புஷ்பா தங்கத்துரையின் கதையில் உருவான இந்தப் படத்தில் கமல்ஹாசன், சுஜாதா, விஜயக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள்.  தட்சிணாமூர்த்தி இசையமைத்திருந்தார்.

இயக்குநர் சரணைப் பார்த்து கெட் அவுட் சொன்ன ஏ.வி.எம். சரவணன்.. மோதலில் உருவாகி மாஸ் ஹிட் அடித்த விக்ரம் படம்

இந்தப் படத்தின் ஷுட்டிங்கின் போது நினைத்துப் பார்க்க முடியாத சில விஷயங்கள் நடந்ததாம். இந்தப் படத்தில் கமல், சுஜாதா இருவரும் அறிமுகமாகும் காட்சியில் சுஜாதா ஊதாப்பூக்களைப் பறித்துக்கொண்டிருப்பார். அப்போது ஒரு விமானம் பறக்கும். விமானம் பறக்கும் திசையில் சுஜாதாவின் பார்வையைத் திருப்ப அங்கே கமல் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பார். அப்போது இருவர் கண்களும் சந்திக்கும். எழுத்தாளரின் புஷ்பா தங்கதுரையின் கற்பனை இதுதான்.

ஆனால் இந்தக் கற்பனையில் எல்லாம் ஓகே. விமானத்திற்கு எங்கே போவது என தெரியாமல் ஹீரோ, ஹீரோயின் ஆகிய இருவரது பார்வைகளும் சந்திப்பதை எடுத்துவிட்டு, விமானம் பறப்பதை ஸ்டாக் ஷாட்டில் எடிட்டிங்கில் இணைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து படப்பிடிப்புக்குத் தயாராகினார்களாம்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த நேரத்தில் தூரத்தில் விமானம் வரும் சப்தம் கேட்டதாம். படக்குழுவினருக்கும், எஸ்.பி.முத்துராமனுக்கும் ஒரே ஆச்சர்யம். நாம் என்ன நினைத்தோமோ அது நடந்துவிட்டது என்று. உடனடியாக படக்குழுவினர் பரபரப்பானர்கள். அந்த விமானம் நம்மை நோக்கி வரும் போது அந்த ஷாட்டை எப்படியாவது எடுத்து விடவேண்டும் என ஒளிப்பதிவாளருக்கு எஸ்.பி.முத்துராமன் ஆர்டர் போட அதே நேரத்தில் சுஜாதாவையும், கமலையும் அந்த சீனுக்கு தயாராக இருக்கும் படி சொல்லியிருக்கிறார்.

கமலுக்கு ஒரே குஷி. சொன்னது போலவே விமானம் அருகே வந்தது. மேலும் நினைத்து போலவே மேலே பறக்க அந்தக் காட்சியை ஒரே டேக்கில் ஒட்டுமொத்த படக்குழுவினரின் ஒத்துழைப்போடு எடுத்திருக்கிறார் எஸ்.பி.முத்துராமன்.

‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ படம் வெளியாகி கமர்ஷியல், சென்டிமெண்ட் என்று ஒரு பாதையில் போய்க் கொண்டிருந்த இயக்குநர் முத்துராமனை கமல்ஹாசன் இப்படி இழுத்து விட்டுவிட்டார் விமர்சனங்கள் வர பின்னர் மீண்டும் அதே கமல்ஹாசனை வைத்து ஏ.வி.எம் தயாரிப்பில் ‘சகல கலா வல்லவன்’ என்ற மாபெரும் ஹிட் படத்தினைக் கொடுத்து மீண்டும் தன்னுடைய பார்மில் வந்திருக்கிறார் எஸ்.பி.முத்துராமன்.