இயக்குநர் சரணைப் பார்த்து கெட் அவுட் சொன்ன ஏ.வி.எம். சரவணன்.. மோதலில் உருவாகி மாஸ் ஹிட் அடித்த விக்ரம் படம்

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குநர்களில் குறிப்பிடத்தகுந்தவர் இயக்குநர் சரண். தனது இயக்கும் ஒவ்வொரு படத்திலும் காதல், காமெடி, சென்டிமெண்ட், ஆக்சன், பாடல்கள் என ஒவ்வொன்றையும் செதுக்கி திரைக்கு வரும் ரசிகர்களுக்கு ஒரு கமர்ஷியல் விருந்து படைப்பதில் கில்லாடி இயக்குநர்.

அஜீத்தை வைத்து தனது முதல் படமான காதல் மன்னனில் இணைந்தவர் தொடர்நது அவருடன் பயணித்து அமர்க்களம், அட்டகாசம், அசல் சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். மேலும் இவரின் படங்களுக்கு பரத்வாஜின் இசையும் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது.

இயக்குநர் சரண் முதன் முதலாக ஏ.வி.எம். என்னும் சினிமா பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கிய படம் தான் ஜெமினி. இந்தத் திரைப்படத்தின் தலைப்பிலேயே ஒரு முரண் இருக்கும். படத்தின் பெயரோ ஜெமினி. ஆனால் தயாரித்ததோ ஏ.வி.எம். இப்படி தங்களுக்கு அந்தக் காலத்தில் போட்டியாக விளங்கிய மற்றொரு ஸ்டுடியோவின் பெயரையே இந்தப் படத்திற்கு வைத்திருந்தார்கள்.

சம்பளத்தில் பாதியை ராமமூர்த்திக்கு தரச்சொன்ன எம்.எஸ்.விஸ்வநாதன்.. இப்படி ஒரு நட்பா?

கடந்த 2002-ல் வெளியான இந்தப் படம் விக்ரமுக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. சேது, தில் படத்திற்குப் பின் இந்தப் படம் விக்ரமுக்கு மிகப்பெரிய திருப்புமுனையைக் கொடுத்து அவரை ஆக்சன் மற்றும் கமர்ஷியல் ஹீரோவாக உயர்த்தியது. திரையரங்குகளில் 100 நாட்களைத் தாண்டி ஓடி படம் பெரிய வெற்றி பெற்றது.

படம் உருவான விதம்

இயக்குநர் சரணுக்கு ஏ.வி.எம் நிறுவனத்திலிருந்து அழைப்பு வரவே அன்றுதான் அவருக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. எனவே மறுநாள் ஏ.வி.எம் சரவணணைப் பார்க்கச் சென்றிருக்கிறார். ஏ.வி.எம்-ன் நிபந்தனைகள் மற்றும் படம் எடுக்கும் விதம் ஆகியவை பற்றி கேள்விப்பட்டிருந்த இயக்குநர் சரண் இதில் ஏ.வி.எம். நிறுவனத்தின் தலையீடு இருக்கக் கூடாது என்பதற்காக ஒரு பத்து கேள்வியை தயாரித்துச் சென்று ஏ.வி.எம். சரவணனிடம் கேட்டிருக்கிறார்.

அதில் இந்தப் படத்தில் உங்களுடைய தலையீடு இருக்கக் கூடாது. நான்தான் தலைப்பு வைப்பேன், இசையைமப்பாளரும் நான் தான் முடிவு செய்வேன். கதையில் நீங்கள் மாற்றம் செய்யக் கூடாது என பல கண்டிஷன்களை ஏ.வி.எம் சரவணணுக்கு இயக்குநர் சரண் போடவே அவரை கெட்அவுட் சொல்லியிருக்கிறார் ஏ.வி.எம். சரவணன். பின்னர் ஏ.வி.எம்., குகன் மீண்டும் சரணிடம் பேசி ஒருவழியாக ஜெமினி படத்தினைஉருவாக்கியிருக்கிறார்கள்.

படம் வெளியாகி பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. ஏ.வி.எம்-க்கு இந்தப் படம் நல்ல லாபத்தைக் கொடுத்தது. மேலும் இந்தப் படத்தில் இடம்பெற்ற ஓ… போடு பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews