ஷங்கர் என்றாலே நினைவுக்கு வருவது பிரம்மாண்டம் தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று இந்தியன் 2 ரிலீஸ் ஆகியுள்ளது. படமும் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. ஆரம்பத்தில் பாட்டு சரியில்ல.
மியூசிக் சரியில்லன்னு அனிருத்தைக் குறை சொன்னவர்கள் இப்போது பிஜிஎம் சூப்பர், பாட்டு எல்லாமே சூப்பர்னு அவரைக் கொண்டாடுகிறார்கள். படமே வேற லெவல்ல இருக்குன்னு ரசிகர்கள் ஒட்டுமொத்தமாகக் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்தப் படத்தின் ரிலீஸையொட்டி யூடியூப் சேனலுக்கு ஷங்கர் பேட்டி கொடுத்துள்ளார். என்ன சொல்றாருன்னு பார்ப்போமா…
எஸ்.ஏ.சந்திரசேகர் சார் கரெக்டா என்ன தேவையோ அதைத் தான் பிளான் பண்ணி எடுப்பார். அவருக்கிட்ட இருந்து தான் எனக்கு அந்த அனுபவம் வந்தது. எவ்வளவு தேவையோ அவ்வளவு தான் எடுப்போம். எக்ஸ்ட்ரா எல்லாம் எடுக்கறது கிடையாது.
என்னுடைய ஒவ்வொரு படத்துக்கும் மேக்சிமம் ஒன்றரை வருஷம் தான் தேவைப்படுது. அதுக்கு மேல காலதாமதம் ஆகக் காரணம் புறக்காரணங்கள் தான். செட் ரெடியாகாம இருப்பது, கொரோனா என பலவற்றைச் சொல்லலாம்.
2.0 படத்துக்கு விஎப்எக்ஸ் வரும். அதுல பறவை சீனுக்கு கரெக்டான நேரத்துல கரெக்டான கம்பெனியால கொடுக்க முடியல. அடுத்ததா பெட்டர் கம்பெனில கொடுத்தா அவங்க ஒரு வருஷம் ஆகும்னு சொன்னாங்க. அப்படின்னா இன்னொரு வருஷம் டிலேவாகத் தானே ஆகும்?
இப்ப உள்ள ஆடியன்ஸ் ஆங்கிலப்படங்களைப் பார்த்து ரொம்ப சிஜி ஒர்க், விஎப்எக்ஸ் எல்லாவற்றையும் தெரிஞ்சி வச்சிருக்காங்க. அவங்க மத்தியில நம்ம படம் போகும்போது கவனமாகத் தான் எடுத்துச் செல்லணும். அவங்கக்கிட்ட போய் இது குறைஞ்ச பட்ஜெட், இந்தியப்படம் அப்படித்தான் இருக்கும்னு எல்லாம் சொல்ல முடியாது.
இந்தியன் 2 படத்துக்கு என்ன விஎப்எக்ஸ் தேவையோ அதைத்தான் யூஸ் பண்ணியிருக்கோம். ஒரு கதைக்கு என்ன மாதிரியான காட்சி வேணும்? அதை எப்படி விஷூவல் பண்ணலாம்னு யோசிக்கும்போது கேமராவைத் தாண்டி ஒரு தொழில்நுட்பம் தேவைப்படுது.
அது எங்க இருக்குன்னு கேட்டு கொண்டு வர்றது தான். இதுக்கு வரம்பற்ற கற்பனையும், பிராக்டிகலான அனுபவமும் தேவை. கொரோனா பீரியடுல ஒரு சயின்ஸ் பிக்ஷன் கதையை எழுதுனேன். அது ரொம்ப பெரிசு. நிறைய விஎப்எக்ஸ் தேவைப்படுது. அதை வச்சிருக்கேன். கொஞ்சநாள் கழிச்சி பண்ணலாம்னு வச்சிருக்கேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.