மாவீரன் படத்தில் மகள் அதிதியின் நடிப்பை பாராட்டிய இயக்குநர் சங்கர்!

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14, 2023 அன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியானது. இப்படத்தில் பிரபல இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கரும் நடித்துள்ளார். படத்திற்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.…

Sivakarthikeyan Shankar Aditi @ Maaveeran Movie Pooja Stills

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14, 2023 அன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியானது. இப்படத்தில் பிரபல இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கரும் நடித்துள்ளார். படத்திற்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது. தற்போது சங்கரும் படத்தை விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சங்கரின் மகள் அதிதி சங்கர் கார்த்தி நடித்த விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அவரது இரண்டாவது படம் ‘மாவீரன்’. சிவகார்த்திகேயனின் நடிப்பு மற்றும் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தை இயக்குனர் சங்கர் பாராட்டியுள்ளார் . அவர் தனது ட்வீட்டில் தனது மகளின் நடிப்பையும் குறிப்பிட்டுள்ளார்.

சங்கரின் ட்விட்டர் பதிவில்,இயக்குனர் மடோன் அஷ்வினின் புத்திசாலித்தனம் மூலம் இந்த மாவீரன் கதை சிறப்பாக அமைந்துள்ளதாக பாராட்டினார். கிளாசி மாஸ் என்டர்டெய்னர் மற்றும் திரைக்கதைக்குள் அற்புதமான நகைச்சுவை உணர்வு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் பாராட்டத்தக்க நடிப்பை வழங்கினார். அதிதி கொடுத்ததை நன்றாக செய்தார். திருமதி சரிதா, யோகிபாபு மற்றும் மிஷ்கின் ஆகியோர் அற்புதமாக நடித்துள்ளனர். ஆக்சன் காட்சிகள், திரைக்கதை மற்றும் படம் சிறப்பாக அமைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தப் படத்திற்காக கடினமாக உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள்! ஒரு மகிழ்ச்சியான புதிய அனுபவம்.” என பதிவிட்டுள்ளார்.

மாவீரன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

‘மாவீரன்’ படத்தில் ‘மாவீரன்’ என்ற கேரக்டரை வரையும் கார்ட்டூனிஸ்ட் வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பத்திரிகையாளராக நடிக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனின் அம்மாவாக பழம்பெரும் நடிகை சரிதா நடிக்கிறார். ஒளிப்பதிவாளர் வித்து அய்யன்னா, இசையமைப்பாளர் பரத் ஷங்கர் மற்றும் எடிட்டர் பிலோமின் ராஜ் ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.