சினிமாவில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. கடினமாக உழைத்து வந்தவர்கள் ஒரு ரகம். வாரிசு சினிமா ஒரு ரகம். இன்னும் நல்ல வாய்ப்புத் தேடி அலைந்து கொண்டிருப்பவர்கள் ஒரு ரகம். இப்படி பல பரிணாமங்களில் சினிமாத்துறையில் பணியாற்றிக் லட்சக்கணக்கானோர் பணியாற்றிக் கொண்டிருக்கின்றர்.
இவர்களில் தொலைக்காட்சிகளில் இருந்து வந்தவர்கள் பலர் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சினிமா உலகிற்கு பலரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவர்களில் சந்தானம், யோகிபாபு, சிவகார்த்திகேயன், புகழ், பாலா உள்ளிட்ட பலர் இன்று புகழின் உச்சியில் இருக்கின்றனர்.
இவர்கள் அனைவருமே நடிகர்களாக உள்ள சூழ்நிலையில் விஜய்டிவியில் ஸ்கிரிப்ட் ரைட்டராக உள்ளே நுழைந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குநராக உயர்ந்திருக்கிறார் நெல்சன் திலீப் குமார். சென்னை நியூ கல்லூரியில் காட்சி ஊடகவியல் படிப்பை முடித்துவிட்டு வாய்ப்புத் தேடி அலைந்து கொண்டிருந்தவருக்கு அவரது தந்தையின் நண்பர் மூலமாக விஜய்டிவியில் ஸ்கிரிப்ட் ரைட்டர் பணி உள்ளது என தகவல் வந்தது.
இதனை அறிந்த நெல்சன் அங்கு சென்று தன்னுடைய பணி விண்ணப்பத்தினை அளித்திருக்கிறார். வாங்கிக் வைத்துக் கொண்டு பின்னர் அழைக்கிறோம் என்று கூறி அனுப்பியிருக்கின்றனர். வெளியே வந்து ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த போது அப்போது விஜய்டிவிக்கு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் இன்டர்ஷிப் பயிற்சிக்காக வந்துள்ளனர். அவர்கள் நெல்சனும் தங்களுடன் தான் வந்துள்ளார் என நினைத்து அவரையும் அழைத்துச் செல்ல உள்ளே அவரது தந்தைக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இருந்திருக்கிறார். அப்போது சில காலம் அவர்களுடன் பணியாற்றி இருக்கிறார் நெல்சன்.
அள்ளிக் கொடுத்த ரஜினி.. படையப்பாவின் மாபெரும் வெற்றியால் பணியாற்றியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்
இவரது வேலை பிடித்துப்போக தொடர்ந்து விஜய் டிவி இவரை வேலைக்கு அமர்த்தியிருக்கிறது. அப்போது இவருக்கு முதல்மாதம் கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ.9000. விஜய்டிவியில் முதன்முதலாக அழகி என்ற ரியாலிட்டி ஷோவில் தனது பணியை ஆரம்பித்தார். தொடர்ந்து ஜோடி நம்.1, நீயா நானா?, கலக்கப்போவது யாரு போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் தனது பங்களிப்பைச் செய்திருக்கிறார். அங்கு இருக்கும் போதுதான் சிவகார்த்திகேயனுடன் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பல விருதுகள் வழங்கும் விழாவிலும் நெல்சன் இயக்குநராக பணியாற்ற நடிகர் சிம்புவின் அறிமுகம் கிடைக்க வல்லவன் படம் வெளிவந்த நேரத்தில் அவரை வைத்து ஆரம்பிக்கப்பட்டதுதான் வேட்டை மன்னன் திரைப்படம். ஆனால் அந்தப் படம் கிடப்பில் போட பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 2018-ல் கோலமாவு கோகிலா என்ற டார்க் காமெடி படத்தினை இயக்கினார்.
இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது. அதன்பின் கோவிட் காலகட்டத்தில் தயாரான டாக்டர் திரைப்படம் கோவிட் முடிந்து வெளியான முதல் படம் என்பதால் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்க காரணமாக இருந்த திரைப்படமாக மாறி வெற்றி பெற்றது. இதுவும் டார்க் காமெடி வகையைச் சார்ந்து. அதன்பின் யாரும் எதிர்பார்க்காத வகையில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யை வைத்து பீஸ்ட் படம் இயக்கினார். இந்தப்படம் விமர்சன ரீதியாக மொக்கை வாங்கினாலும் வசூலில் குறைவைக்கவில்லை.
அதன்பின் சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தினை இயக்கி இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தார். பான் இந்தியா நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இவ்வாறு மாதம் 9,000 சம்பளத்தில் ஆரம்பித்த நெல்சனின் சினிமா பயணம் இன்று பலகோடிகளை சம்பளமாகப் பெறும் அளவிற்கு வளர்ந்துள்ளது.