காதல் திரைப்படங்கள் என்றால் எல்லோருக்கும் பிரியம் தான். ரசிகர்கள் அதுபோன்ற படங்களுக்கு ரொம்பவே ஆதரவு கொடுப்பார். அவர் தான் கதிரேசன் என்ற இயக்குனர் கதிர். இவரைப் பற்றிப் பார்ப்போம்.
சாதாரண படங்களுக்கு டிசைன் பண்றவர் தான் கதிர். படத்தின் டைட்டில் கார்டுக்கு டிராயிங் பண்ணுவாங்க. மூன்றாம்பிறை படத்திற்கு அவர் தான். நிறைய பாக்யராஜ் படங்களுக்கும் இவர் தான் டிசைனர்.
பைன் ஆர்ட்ஸ் ஸ்டூடண்ட். சினிமாவில் உதவி இயக்குனராக ஆசைப்பட்டு பல பேரிடம் வாய்ப்பு கேட்கிறார்.ஜி.எம்.குமார் இயக்கிய அறுவடை நாள் படத்திற்கு உதவி இயக்குனராக பணிபுரிகிறார்.
இயக்குனராக ஆசைப்பட்டு அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார். ஏற்கனவே இவர் மூன்றாம்பிறை படத்தின் டைட்டில் கார்டு பண்ணினதால, சத்யஜோதி பிலிம்ஸ்சிடம் கதை சொல்கிறார்.
நிறைய நடிகர்களிடம் இந்தக் கதையை சொல்றாங்க. எல்லாரும் தயங்குறாங்க. என்ன இது காதலை சொல்லாம தயங்கி தயங்கின்னுட்டு ரொம்ப டிரையா இருக்குன்ன நடிக்க மறுக்கிறாங்க.அதனால முரளிக்கிட்ட கதையை சொல்லப் போறாரு.

கதையை சொன்னதுமே முரளிக்கு ரொம்பப் பிடிச்சிடுது. அப்படி நடிச்ச படம் தான் இதயம். படத்தை ஒவ்வொரு பிரேமும் ரசிச்சி ரசிச்சி பண்ணிருப்பாரு.
ஹீரா இந்தப்படத்தில் தான் அறிமுகம். இந்தப் பாதங்கள் மண்ணில் நடக்க வேண்டியவை அல்ல மலர்கள் மீது… ராஜா இந்தப் பெயரை உச்சரிக்கும்போதெல்லாம் தெரிந்து கொண்டேன் இவ்வளவு அழகா என்று… இப்படி காட்சிக்குக் காட்சி கவிதைகள் வரும். இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே செம மாஸாக இருக்கும்.
உழவன் படத்தில் வேறொரு கோணத்தில் கதிரைப் பார்க்கலாம். இதில் ஏ.ஆர்.ரகுமான் மியூசிக். படமும் ரொம்ப வித்தியாசமாக இருக்கும். அடுத்து இவர் பண்ணிய பெரிய படம் தான் காதல் தேசம். படம் பெரிய ஹிட். ஆனால் அந்த உணர்வும், உயிரும் படத்தில் இல்லை. உடனே பிரம்மாண்டத்தை நோக்கிப் போகிறார்.
காதல் வைரஸ், காதலர் தினம், காதல் தேசம்னு பல படங்கள் வருகிறது. கடைசி வரை காதல் படங்களையே எடுத்து ஓய்ந்து போய்விட்டார்.
மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் சுபையர் ஜமால் தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


