சினிமா உலகில் குறும்படங்களில் வெற்றியை தொடர்ந்து இயக்குனராக அவதாரம் எடுத்தவர் தான் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கத்தில் முதலில் வெளியான தமிழ் திரைப்படம் பீட்சா. வெறும் ஒன்றரை கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 8கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்திருந்தது. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சேர்த்தது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை படைத்தது.
இந்த இரண்டு திரைப்படங்களின் மகத்தான வெற்றியை தொடர்ந்து நடிகர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் பேட்ட திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் 80, 90களில் வலம் வந்த இளமையான ரஜினியை நாம் பார்த்திருக்க முடியும். அந்த அளவிற்கு ரஜினியை மிக மாசாகவும், ஸ்டைல் ஆகவும் இந்த படத்தில் காண்பித்து ஒரு கிளாசிக் திரைப்படத்தை தன்னால் எடுக்க முடியும் என நிரூபித்து காட்டியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
அதைத்தொடர்ந்து அவர் இயக்கிய ஜகமே தந்திரம், மெர்குரி, மகான் போன்ற திரைப்படங்கள் சுமாரான வெற்றியைப் பெற்றிருந்தது. விக்ரம் நடிப்பில் வெளியான மகான் திரைப்படம் சிறப்பாக கதை களத்தை கொண்டு இருந்தாலும் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் ஓடிடியில் ரிலீஸ் செய்ததால் தோல்வியை தழுவியது. இந்தப் படங்களுக்கு இடையில் நடிகர் சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு கிடைத்துள்ளது.
அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினி நடிப்பதற்கு முன்பாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களை அழைத்து ஒரு கிராமத்து பின்னணியில் கதை இருந்தால் கூறும்படி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் ஆனால் அந்த நேரத்தில் இயக்குனர் கார்த்திக் இடம் அப்படிப்பட்ட கதை இல்லாத காரணத்தினால் அந்தப் பட வாய்ப்பு நழுவியது. அதைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து ட்ரைலர் திரைப்படம் வெளியாகி 650 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து வேற லெவல் ஹிட் கொடுத்தது.
இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகிரே தண்டா XX திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அழைத்து தனக்கு ஒரு படம் தயார் செய்யும் படி கூறியுள்ளார். தற்பொழுது கிராமத்து பின்னணி கதை வேண்டும் என வற்புறுத்தாமல் இயக்குனரின் விருப்பப்படி ஒரு கதையை தயார் செய்து வரும்படி கேட்டுக் கொண்டுள்ளார். பேட்ட திரைப்படத்தை போன்று உங்களது ஸ்டைலில் ஒரு ஸ்கிரீன் ப்ளே தயாரித்து வரும்படி அன்பு கட்டளை விடுத்துள்ளார் ரஜினி.
சின்னக் கலைவாணருக்கு இப்படி ஓர் இளகிய மனமா? குமரிமுத்து சொன்ன உண்மை
இந்த தகவலை அறிந்து உற்சாகமான கார்த்திக் சுப்புராஜ் உடனே ரஜினிக்கான அடுத்த படத்தின் கதை உருவாக்கத்தில் இறங்கி உள்ளார். ஏற்கனவே அவரிடம் உள்ள கதைகளில் சில மாற்றங்கள் செய்தோ அல்லது தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இருக்கும் நல்ல வரவேற்பிற்கு ஏற்றார் போல் ஒரு மாசான கதை எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினிகாந்த் இணையும் இந்த திரைப்படம் பேட்ட 2 திரைப்படம் ஆக இருக்குமா அல்லது வேறு கதை கொண்ட திரைப்படமாக இருக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.