சின்னக் கலைவாணருக்கு இப்படி ஓர் இளகிய மனமா? குமரிமுத்து சொன்ன உண்மை

சின்னக் கலைவாணர் விவேக்கை காமெடி நடிகராகத் தான் நிறைய பேருக்குத் தெரியும். ஆனால் அவருக்குள்ளும் ஒரு கர்ணன் இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா? தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்திலுக்குப் பிறகு காமெடியில் கொடிகட்டிப் பறந்தவர்கள் விவேக்-வடிவேலு இவர்களுக்கு அடுத்து இன்று வரை அந்த இடங்களை யாராலும் நிரப்ப முடியவில்லை. எத்தனை காமெடி நடிகர்கள் வந்தாலும் இவர்களை மிஞ்சவும் ஆளில்லை.

காமெடியில் தனது கூரிய சமூக கருத்துக்களையும் திணித்து மக்களிடையை விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் விவேக். அதனால்தான் அவருக்கு சின்னக் கலைவாணர் என்ற பெயரும் வந்தது. விதி விலியது என்பது போல் காலன் அவரை சீக்கிரமே அழைத்துச் சென்று விட்டான்.

இந்நிலையில் 80, 90 களின் காலகட்டங்களில் நடிகர் குமரிமுத்து அவர்கள் சிறிய துணைப் பாத்திரங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். குமரிமுத்து என்றதும் நினைவுக்கு வருவது அவரது ஒன்றரைக் கண்ணும், இடிச்சிரிப்பும்தான். ஆனால் அவரின் நிஜ வாழ்வு சோகமும், வறுமையும் நிறைந்ததாகவே இருந்தது. மகளின் நிச்சயித்த திருமணத்துக்குப் பணமில்லாமல் ஏழ்மையில் தவித்தார் குமரிமுத்து!

செத்தாலும் நான்தாண்டா பாப்கிங் : அடேங்கப்பா மைக்கேல் ஜாக்சன் ஜாக்கெட் இவ்வளவு கோடிக்கு ஏலமா?

அப்போது இலங்கை கலை நிகழ்ச்சி நாடகத்துக்கு விவேக்  செல்ல இருந்தார். குமரிமுத்து நண்பரிடம் தயங்கித் தயங்கி, பண உதவி கேட்க, நண்பரோ, அப்போது கொடிகட்டிப் பறந்த நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் நடிக்கும் நாடகம் ஒன்றை இலங்கையில் அரங்கேற்றுவதன் மூலம் கிடைக்கும் இலாபப் பணத்தில், குமரிமுத்து அவர்களுக்கு, ரூபாய் ஐம்பதினாயிரம் பணம் கொடுக்க இயலும் என்று தெரிவித்தார்; விவேக் அவர்களுக்குச் சம்பளமாக ரூபாய் இரண்டு இலட்சம் கொடுக்கலாம் என்றும் கூறினார்.

உடனே விவேக்கிடம் குமரிமுத்து கேட்க, தயங்காமல் ஒத்துக் கொண்டார் விவேக். மேலும் தனக்குக் கிடைத்த  2 இலட்சம் முழுவதையும் குமரிமுத்து மகள் திருமணத்துக்குக் கொடை வழங்கிய வள்ளல் விவேக்!

நாடகமும் முடிந்தது; குமரிமுத்து அவர்களும், விவேக் அவர்களும் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு வந்த விழாக் குழுவினர், குமரிமுத்துவிடம் ஐம்பதினாயிரம் பணத்தைக் கொடுத்துவிட்டு, விவேக் அவர்களிடம் ரூபாய் இரண்டு இலட்சம் பணத்தைப் பேசியபடி கொடுத்தார்கள்.

விழாக் குழுவினர் போனதும், குமரிமுத்துவிடம் வந்த விவேக் அவர்கள், “அண்ணே! பிடிங்க இந்த இரண்டு இலட்ச ரூபாயை! மகளோட கல்யாணத்தை ஜாம் ஜாமென்று நடத்துங்கள்!” என்று தமக்குக் கிடைத்த 2 இலட்சம் பணத்தை அப்படியே குமரிமுத்து அவர்களின் மகள் திருமணத்துக்குக் கொடையளித்தார் விவேக்.

“கலைவாணருக்குப் பிறகு, சிறந்த மனிதரும், நடிகரும் விவேக் அவர்கள் மட்டும்தான்” என்று ஆனந்தக் கண்ணீருடன் அழுதுகொண்டே கூறினார் நடிகர் குமரிமுத்து.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.