கே. பாலசந்தர் கொடுத்த கெடு.. ஒரே இரவில் ஒரு படத்தின் மொத்தக் கதையையும் எழுதிய விவேக்..

By John A

Published:

தமிழ் சினிமாவில் பாலச்சந்தரால் பட்டை தீட்டப்பட்டு ஜொலித்த, ஜொலித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் ஏராளம். சூப்பர் ஸ்டார் ரஜினியில் ஆரம்பித்து ராகவா லாரன்ஸ் வரை திரையுலகில் அறிமுகப்படுத்தியவர். இவற்றில் முக்கியமானவர் நடிகர் விவேக். நடிகர் விவேக்கை வெறும் காமெடி நடிகர் என்று மட்டுமே நாம் எடைபோட்டுவிடக் கூடாது. அற்புதமான மனிதர், சமூக செயல்பாட்டாளர், இசைக்கலைஞர், கதாசிரியர் எனப் பல்முகம் கொண்ட கலைஞன் அவர்.

சின்னக் கலைவாணர் விவேக்கை மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாலச்சந்தர் சந்தித்திருக்கிறார். விவேக் மதுரை தந்தி அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். மேலும் விவேக் மிமிக்ரி மற்றும் நடனத் திறமையும் கொண்டிருந்ததால் பாலச்சந்தரிடம் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. கே.பாலச்சந்தர் தான் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தில் விவேக்கை நடிக்க வைக்க அழைக்கிறார்.

அப்போது கே.பாலச்சந்தர் விவேக்கின் எழுத்துத் திறமையைப் பார்த்து மனதில் உறுதி வேண்டும் கதை விவாதங்களில் பங்கேற்க அழைக்கிறார். அதற்கு முன்னர் சினிமா வாசமே இருந்திராத நடிகர் விவேக்குக்கு இது புது அனுபவமாக இருக்க முதன் முதலாக மனதில் உறுதி வேண்டும் படத்தின் கதை விவாதத்தில் பங்கேற்கிறார்.

காலங்கடந்தும் கொண்டாடப்படும் வாகை சந்திரசேகர் பாடல்கள்.. இவ்ளோ சூப்பர் ஹிட் பாடல்களா?

அப்போது கே.பாலச்சந்தர் விவேக்கிடம் ஒரு பெண் செவிலியர் என்ற ஒன்லைனை மட்டும் சொல்ல அடுத்தடுத்து விவேக் அவருக்கு தம்பி, தங்கைகைள் இருக்கலாமா என்று கேட்க, இருக்கட்டும் என்று கூறி ஒருவழியாக ஓரளவு கதைக் களத்தினைப் பிடித்திருக்கிறார் விவேக். அப்போது கே.பாலச்சந்தர் இன்று நீ என்னிடம் சொன்னதை ஸ்கிரிப்படாக எழுதிக் கொண்டு வா என்று கூற, விவேக் ஒருவாரத்தில் எழுதிக் கொண்டு வரட்டுமா என்று கேட்டிருக்கிறார்.

கே. பாலச்சந்தர் விவேக்கைப் பார்த்து நாளை காலை 7 மணிக்கு ஸ்கிரிப்ட் பேப்பர் வேண்டும் என்று கூற, அப்போதே மதியம்1 ஆகியிருந்தது. உடனடியாகக் கிளம்பியவர் தான் சென்ற பேருந்தின் டிக்கெட்டைக் கூட விட்டு வைக்காமல் குறிப்புகளை எழுதியிருக்கிறார்.

ஒருவழியாக கே.பாலச்சந்தர் கேட்டபடி இரவெல்லாம் விழித்தி ஸ்கிரிப்ட் தயார் செய்து காலை 7 மணிக்கெல்லாம் பாலச்சந்தரிடம் நீட்ட அதில் விவேக் குறிப்பிட்டிருந்த சுஹாசினி தம்பி கதாபாத்திரத்தில் நீயே நடி என முதன் முதலாக மனதில் உறுதி வேண்டும் படத்தில் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் கே.பாலச்சந்தர். அதன்பிறகு விவேக்கின் வளர்ச்சி மளமளவென எகிறியது. மேலும் உதவி இயக்குநராகவும், ஸ்கிரிப்ட ரைட்டராகவும் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறார் விவேக்.