காலங்கடந்தும் கொண்டாடப்படும் வாகை சந்திரசேகர் பாடல்கள்.. இவ்ளோ சூப்பர் ஹிட் பாடல்களா?

சினிமா மட்டுமின்றி கலைஞர் கருணாநிதியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுகவின் அரசியல்வாதியாகவும் செயல்பட்டு வருபவர் நடிகை வாசை சந்திரசேகர். பொதுவாக 80-களில் வந்த சினிமாக்களில் ஹீரோவுக்கென சில இலக்கணங்கள் உண்டு. இதை இரண்டையும் உடைத்து நடிகர்களாக ஒரே சமயத்தில் ஜொலித்தவர்கள் கேப்டன் விஜயகாந்த் மற்றும் வாகை சந்திரசேகர்.

இவர்கள் இருவரும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்கள். நெருங்கிய நண்பர்களும் கூட. பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் அறிமுகமான வாகை சந்திரசேகரை கவனிக்க வைத்த படம் என்றால் அது நிழல்கள் படம் தான்.

நிழல்கள் படம் சுமாரான வெற்றிப் படம் என்றாலும் அதில் வாகை. சந்திரசேகரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. குறிப்பாக மடை திறந்து பாடல் இன்றும் ஒலிக்காத இடங்களே கிடையாது. மடைதிறந்து பாடும் நதியலை நான் என கடற்கரையில் அவர் வயலின் எடுத்துக் கொண்டே நடனம் ஆடுவது இன்றும் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்தப் பாடலை யோகி குழுவினர் பாப் ராப் பாடலாக மாற்றி இன்னும் இந்தப் பாடலுக்கு அழகு சேர்த்தார்கள். இந்தப் பாடலின் மூலம் கவனிக்க வைத்த வாகை. சந்திரசேகருக்கு பொதுவாகவே பல பாடல்கள் ஹிட் ஆகியிருக்கிறது.

ஹீரோவாக சில படங்களே நடித்தாலும், குணச்சித்திர நடிகராகவே பெரும்பாலான படங்களில் நடித்துள்ளார். சிவப்பு மல்லி திரைப்படத்தில் இடம்பெற்ற ரெண்டு கண்ணம் சந்தன கின்னம் அசத்தலான காதல் மெலடிப்பாடலாக ஒலிக்கிறது. கே.ஜே.யேசுதாஸ், பி.சுசீலா குரலில் ஒலித்த இப்பாடல் 80களில் ரேடியோவில் அதிகம் ஒலிப்பரப்பப்பட்டு ஹிட் ஆகியது.

இதனைடுத்து இதே படத்தில் இடம்பெற்ற எரிமலை எப்படி பொறுக்கும்? என்ற புரட்சிப் பாடல் இன்றும் கம்யூனிஸ்ட் மேடைகளை அலற விடுகிறது. தொழிலாளர்கள் உரிமைக்காக போராடும் கதாபாத்திரத்தில் வாகை சந்திரசேகர் கேப்டனுடன் முழுங்கியிருப்பார்.

மோகனை கண்டபடி திட்டிய கே.பாலச்சந்தர்.. மொட்டை அடித்ததால் வந்த வினை.. மிஸ் ஆன மரோசரித்ரா

அடுத்ததாக 1986-ல் வெளிவந்த முதல் வசந்தம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஆறும் அது ஆழம் இல்ல பாடல் இன்று கேட்டாலும் நம்மை ஏதோ ஓர் இனம்புரியாத உணர்வுக்கு அழைத்துச் செல்லும். வாகை சந்திரசேகருடன் ரம்யாகிருஷ்ணன் நடித்திருப்பார்.

காதல் தோல்வியில் பாடப்பட்ட சோக கீதம் இது. இந்தப் பாடலும் ஹிட் ரகமே. பாலைவனச் சோலை படத்தில் 5 நண்பர்களில் ஒருவராக வாகை. சந்திரசேகர் வருவார். இந்தப் படத்தில் இடம்பெற்ற மேகமே..மேகமே.. பாடலும் மறக்க முடியாது. இதே படத்தில் இடம்பெற்ற ஆளானாலும் ஆளு… போன்ற பாடலும் எவர்கீரீன் ஹிட் லிஸ்ட்டில் இருக்கும்.

இந்தப் பாடல்கள் அனைத்தும் கேஸட்டுகளிலும், ரேடியோவிலும் பிரபலமாக ஒலித்து வாகை. சந்திரசேகரை மூலை முடுக்கெல்லாம் சென்று சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews