தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றவர் இயக்குனர் பாலுமகேந்திரா என்று சொன்னால் மிகையில்லை. அவர் திரையுலகிற்குள் நுழைவதற்கு முன் தமிழ்சினிமா இருட்டாகத்தான் இருந்தது. ஆனால் பாலுமகேந்திரா தான் இயற்கை ஒளியை வாங்கி தமிழ் சினிமாவிற்கு பெருமையை சேர்த்தார்.
தமிழ் சினிமா மெட்ராஸில் உருவாக்கப்பட்டது. அப்போது தெலுங்கு சினிமா கூட மெட்ராஸ், இப்போது சென்னையில் தயாரிக்கப்பட்டது. பாலுமகேந்திரா ஒரு அப்பா தனது குழந்தைகளை விடுமுறைக்கு அழைத்துச் செல்வது போல, தமிழ் சினிமாவை ஊட்டிக்கு அழைத்துச் சென்றார்.
படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இது குளுமையான உணர்வைத் தந்து ரசிக்கும் படி அந்தத் தருணத்தை இனிமையாக்கியது. ஏசி தியேட்டரில் உட்கார்ந்து அவரது படங்களை ரசிக்கும்போது நிஜமாகவே ஊட்டிக்குச் சென்று வந்த உணர்வு ஏற்படும். அமெரிக்க தொழில்நுட்பம் இந்தியாவில் வருவதற்கு முன்பே அவர் விர்ச்சுவல் ரியாலிட்டியை கண்டுபிடித்தார்.
பாலுமகேந்திரா ஹீரோயின் இன்னும் அழகாக இருப்பார். முள்ளும் மலரும், மூன்றாம் பிறை, வீடு, சந்தியா ராகம், ஜூலி கணபதி, சதிலீலாவதி படங்களைப் பார்த்தால் உங்களுக்கேத் தெரியும். சகலகலாவல்லவனையோ, முரட்டுக்காளையையோ எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தாலும் அதை கமல், ரஜினி படங்கள் என்றே இன்று வரை சொல்கின்றனர்.
ஆனால் பாலுமகேந்திரா, கமல் மற்றும் ஸ்ரீதேவியை வைத்து மூன்றாம் பிறையை ஊட்டியில் மட்டுமே உருவாக்கினார். வெளியான அன்று முதல் இன்று வரை அது பாலுமகேந்திரா படம் என்று தான் சொல்கிறார்கள்.
சகலகலாவல்லவனோ, முரட்டுக்காளையோ இந்தியில் உருவாகவில்லை, ஆனால் மூன்றாம் பிறை இந்தியில் கமல், ஸ்ரீதேவி நடிப்பில் சத்மாவாக உருவாக்கப்பட்டது. யேசுதாசுக்கு எத்தனையோ ஹிட் பாடல்கள் இருந்தாலும் மூன்றாம்பிறையில் வரும் கண்ணே கலைமானே பாடல் அவருக்குத் தனித்துவம் வாய்ந்ததுதான்.
பாடலாசிரியர் கண்ணதாசனுக்குப் பொருத்தமான அஞ்சலியாகவே இந்த மூன்றாம்பிறை பாடல் அமைந்துள்ளது. இது அவரது கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலு மகேந்திரா தனது படங்களில் கையாளும் ஒளியிலேயே கவிதைகளைச் சொல்லி விடுவார். படம் பார்ப்பதற்கே அத்தனை ரம்மியமாக இருக்கும். ஏதோ ஒரு புது உலகிற்குச் சென்று வந்தது போன்ற உணர்வு ஏற்படும். மூடுபனியில் வரும் என் இனிய பொன் நிலாவே பாடல் செம சாங்.
இப்போதும் அது நமக்குள் ஒரு வித இனிய தாக்கத்தை ஏற்படுத்தும். எவ்வளவு வலி மனதில் இருந்தாலும் இந்தப் பாடலைக் கேட்கும் போது பறந்து போய்விடும். பாலுமகேந்திரா இளையராஜாவிடம் இருந்து பாடலை வாங்குவதிலும் வல்லவர்.
மெலடி படங்களை மட்டும் எடுத்து வந்த பாலுமகேந்திராவை ரசிகர்கள் கமர்ஷியல் படங்களை செய்யுமாறு கேட்டனர். அதற்கும் அவர் கொடுத்த புத்திசாலித்தனமான டைட்டில் தான் நீங்கள் கேட்டவை. படமோ மெகா ஹிட். பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின. அவர் ஒரு போதும் ரீமேக் படங்களை உருவாக்கவில்லை.