உலகத்தரத்தில் சினிமாக்களை எடுப்பதில் வல்லவரான மிஷ்கின் குறித்து இயக்குநர் பாலா சுவாரஸ்ய தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகிவரும் படம்தான் Devil. விதார்த், பூர்ணா நடித்துள்ள இந்தத் திரைப்படம் மூலம் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார் இயக்குநர் மிஷ்கின். இத்திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. ஏற்கனவே லியோ வெற்றி விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின் தளபதி விஜய்யை ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரங்களில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறியது பல இயக்குநர்களை யோசிக்க வைத்தது.
இந்நிலையில் DEVIL திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பாலா, மிஷ்கின் தற்போது நான் இயக்கி வரும் வணங்கான் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிதாகவும், அதில் ஒரு காட்சியை எடுத்து முடித்த பிறகு அதை மானிட்டரில் பார்த்த போது திருப்தியா என்று கேட்க பல முறை அந்தக்காட்சியைப் பார்த்து இல்லை என்றார். ஏன் என்று கேட்க படத்தில் வரும் பெண் கதாபாத்திரம் காட்சிப்படி தலையைக் குனியாமல் கேமராவைப் பார்த்தாகவும் அது சரியில்லை என்றும் கூறினார்.
ஆபிஸ் பாய் டூ மக்கள் நாயகனான ராமராஜன்… ரஜினி, கமலுக்கே டஃப் கொடுத்த ஹீரோ
இவ்வளவு உன்னிப்பாக திரையில் வரும் கதாபாத்திரங்களை யாரும் பார்க்க மாட்டார்கள். ஆனால் மிஷ்கின் அதையெல்லாம் கவனித்து படத்தைச் செதுக்குவார் என்று கூறினார். மேலும் இந்த மாதிரி திறமையாளரைப் பார்த்து நான் பொறாமைப் பட்டதாகவும் பாலா கூறினார். மேலும் மிஷ்கினுக்கு முன் தானெல்லாம் ஒன்றும் இல்லை எனவும் Devil ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாலா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் சைக்கோ கேரக்டர்களை வடிவமைப்பதில் கைதேர்ந்த இயக்குநரான மிஷ்கின் பெரும்பாலும் தன்னுடைய படங்களில் இசைஞானியை இசையமைக்க வைப்பார். என்னை அப்பா என்று அழைக்காதே என்று இளையாராஜா சொல்ல அதனால் மனம் வருந்தி பின்னர் ஐயா என்று அழைக்கத் தொடங்கிவிட்டார். அதன்பின் இனி இளையராஜாவுடன் இணைய மாட்டேன் என்று கூறிய மிஷ்கின் Devil படம்மூலமாக தானே இசையமைக்க ஆரம்பித்து நடிகர், எழுத்தாளர், இயக்குநர் என பன்முகம் காட்டி தற்போது இசைத்துறையிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
ஊடகத் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் செய்திகள், கட்டுரைகள், சிறப்புச் செய்திகள், பேட்டிகள், விளம்பரப் பிரிவு, விநியோகம் என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.
