சினிமாவில் சான்ஸ் பெற்று பெரிய நடிகராக வேண்டும் என்று இன்றும் சென்னை நோக்கி படையெடுக்கும் இளைஞர்களும், கலைஞர்களும் ஏராளம். பலகட்ட முயற்சிகளுக்குப்பின் ஏதேனும் ஒரு சிறிய வாய்ப்புக் கிடைத்தால் கூட அதில் தங்களது திறமையை நிரூபித்து பின் படிப்படியாக அடுத்தடுத்து முன்னேறிச் செல்கின்றனர். அப்படி ஒரு சிறியரோலில் ஆரம்பித்து இன்று அனைவரும் அறியும் நடிகராக இருப்பவர்தான் ராஜாராணி பாண்டியன்.
இவரை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அட்லி இயக்கிய ராஜாராணி படத்தில் ஜெய்க்கு அப்பாவாக வரும் போலீஸ்கார தந்தை வேடத்தில் நடித்தவர்தான் இந்த பாண்டியன். திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாக இயக்குநர்களுக்கு பெர்ஷனல் போட்டோகிராபராகவும், திருமண போட்டோகிராபியும் வேலையும் செய்து வந்துள்ளார். அப்படி ஒருநாள் இவருக்கு முத்தாய்ப்பாக அமைந்த வாய்ப்புதான் ராஜா ராணி திரைப்படம். ராஜாராணி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது, இயக்குநர் வெங்கடேஷ் ஒரு படத்தில் போட்டோகிராபராக பணியாற்ற ரூ. 75,000 சம்பளத்தில் அழைத்திருக்கிறார்.
தேவர் மகனுக்கு அச்சாரம் போட்ட ஆவாரம் பூ.. நாசரின் திரை வாழ்க்கைக்கு திருப்பு முனை கொடுத்த தருணம்
ஆனால் அப்போது இவருக்கு ராஜாராணி படத்தில் நடிக்கப் போகிறோம் என்பதற்காக அந்த வாய்ப்பினை மறுத்திருகிறார். அந்தப் படத்தில் இயக்குநர் அட்லி இவரை அழைத்து உங்களுக்கான சம்பளம் ரூ.3500 என்று கூறியிருக்கிறார். பாண்டியனுக்கு பகீர் என்றாக, அப்போது அவர் அட்லியிடம், “குறும்பங்களில் நடிப்பவர்களுக்கே ரூ.5000 தர்றாங்க சார் என்று கூற, முதலில் இருந்த 3000த்திலிருந்து 500 சேர்த்து 3500 கொடுத்திருக்கிறார்.
அப்போது அந்த சம்பளத்தை கொடுத்த கேஷியர் பாண்டியனிடம், “கவலைப் படாதீங்க.. இந்தப் படம் ரிலீஸ் ஆன பின்பு இந்த 3500க்குப் பின்னால் இன்னொரு ஜீரோ சேர்த்து வாங்கும் அளவிற்கு உங்கள் கதாபாத்திரம் பேசப்படும்“ என்று கூற, அதன்படியே ராஜாராணி படம் ஹிட் ஆனது. மேலும் அந்த கேஷியர் சொன்ன படியே அடுத்தடுத்து வாய்ப்புகள் வர இன்று குணச்சித்திர நடிகராக அவதாரம் எடுத்து வருகிறார் பாண்டியன். இவரை யூகி சேது சந்தித்து ராஜாராணி பாண்டியன் என்று அழைக்க ஆரம்பித்தார். தற்போது கவின் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்டார் படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.