தேவர் மகனுக்கு அச்சாரம் போட்ட ஆவாரம் பூ.. நாசரின் திரை வாழ்க்கைக்கு திருப்பு முனை கொடுத்த தருணம்

தமிழ் சினிமாவிற்கு எப்படி கிராமப்புற இயக்குநர் என்ற பெயரை இயக்குநர் இமயம் பாரதிராஜா எடுத்தாரோ அதேபோன்று மலையாளத்தில் கேரள தேசதின் அழகியலையும், பூலோக சொர்க்கம் கேரளாவின் கிராமங்களையும் தனது படங்களில் கொண்டு வந்து நிறுத்தியவர்தான் இயக்குநர் பரதன். மலையாளம் மற்றும் தமிழில் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இயக்கியுள்ளார். இந்திய சினிமாவின் மைல்கல்லாக விளங்கிய தேவர் மகன் திரைப்படம் இவரது இயக்கத்தில் வெளிவந்ததே.

தேவர் மகனில் சிவாஜி, கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக கவனிக்க வைத்தவர் நாசர். மாயத்தேவராக படம் முழுக்க மிரட்டியிருப்பார். இவருக்கு இந்தக் கதாபாத்திரம் வருவதற்கு முன்னதாக தமிழ் சினிமாவில் திருப்புமுனை ஏற்படுத்திக் கொடுத்த படம் என்றால் அது ஆவாரம் பூ திரைப்படம் தான். 1985லியே நாசர் திரைப்படங்களில் அறிமுகமாகியிருந்தாலும், அதற்கு அடுத்து பல படங்களில் துணை நடிகராகவும், இரண்டாம் நிலை வில்லனாகவும் நடித்து வந்தார்.

மெட்டுக்குப் பாட்டா? பாட்டுக்கு மெட்டா? வைரலாகும் வாலி-நா.முத்துக்குமார் பேட்டி

நாசருக்கு அவரது திரைவாழ்க்கையில் ஆவாரம் பூ மிகப்பெரிய திருப்புமுனையைக் கொடுத்து, அதற்கு அடுத்ததாக தேவர் மகனையும் ஒரே ஆண்டில் தந்தது. ஆவாரம் பூ திரைப்படத்திற்காக இயக்குநர் பரதன் எளிமையான ஒரு கிராமத்து மனிதன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பலரையும் முயற்சி செய்தார். இறுதியாக ஆவாரம் பூ திரைப்படத்தின் தயாரிப்பாளர் கேயார் பரிந்துரையின் பேரில் நாசர் பரதனைச் சந்திக்க அப்போது அவர் இவரை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை. மேலும் இந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் பொருந்த மாட்டார் எனக் கருதினார்.

பின்னர் நாசரின் தலைமுடியை வெட்டி, மீசையை பெரிதாக வைத்துப் பார்த்தவருக்கு மனதில் ஏதோ தோன்ற ஓகே நாளை வா பார்க்கலாம் என்று அனுப்பியிருக்கிறார். மேலும் தனது உதவியாளரிடம் கிராமத்தில் யாராவாது திரிவார்கள் அவர்களை கொண்டு வா என்றும் கூறியிருக்கிறார்.

மறுநாள் நாசர் வந்தவுடன் அந்தக் கதாபாத்திரம் பற்றி பரதனிடம் கேட்டிருக்கிறார். அப்போது ஒரே வரியில் ‘மாடோடு மாடாகத் திரிந்து மாடாகிப் போனவன்’ என்று சொல்லிவிட்டு புகைத்துக் கொண்டே சென்று விட்டார். நாசர் அதன்பின் அந்த வார்த்தைகளை உணர்ந்து இதுதான் அந்தப் பாத்திரம் என அறிந்து அதற்கேற்றவாறு நடிக்க பரதன் பிடித்துப் போய் ஆவாரம் பூ படத்தில் நாசரை நடிக்க வைத்தார். நாசருக்கு இந்தப் படம் திரை வாழ்க்கையில் திருப்புமுனையைக் கொடுத்தது. இதிலும் சர்க்கரைத் தேவனாக நாசர் நடிப்பில் அசத்தியிருப்பார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...