தனது ஒரே ஒரு படம் மூலம் மலையாள சினிமை உலகையே பான் இந்தியா சினிமாவாக மாற்றி வெற்றிக் கொடி நாட்டிய இயக்குநர்தான் அல்போன்ஸ் புத்தரன். பிரேமம் என்ற மலையாளப் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னட ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்திருப்பார்கள். நிவின்பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் மூன்று காதல் கதையைக் கொண்டது. சுருக்கமாகச் சொன்னால் நம்மூரில் சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படத் தழுவல்தான்.
அதே கதையே அப்படியே தூக்கிக் கொண்டு மலையாள சினிமாவே கொண்டாடும் விதமாக மெஹா ஹிட் படமாக உருமாற்றியிருந்தார் அல்போன்ஸ்புத்திரன். பிரேமம் என்ற ஒரே படத்தில் மலையாள ஹிட் இயக்குநர்களின் லிஸ்ட்-ல் சேர்ந்த அல்போன்ஸ் புத்திரனின் சமீபத்திய புகைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் சோசியல் மீடியாக்களில் வைரல் ஆனது.
அல்போன்ஸ் புத்திரனுக்கு என்ன ஆனது என்று ரசிகர்கள் கேள்வியெழுப்பிய நிலையில் அவருக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதாகவும் இனி பெரிய படங்கள் இயக்குவதை நிறுத்தப்போவதாகவும் அறிவித்திருந்தார். ஆனால் குறும்படங்கள் மற்றும் பாடல் வீடியோக்கள் மற்றும் ஓடிடி தளங்களில் தன்னுடைய சினிமா பயணம் தொடரும் எனவும் அறிவித்தி அவர் கடந்த ஆண்டு கமல்ஹாசனின் பிறந்த நாளுக்கு போட்ட வாழ்த்துப் பதிவிற்கு உலகநாயகனும் அவருக்கு வாய்ஸ் மெசேஜ் வழியாக ரிப்ளே செய்திருந்தார்.
இந்நிலையில் அல்போன்ஸ் புத்திரன் இனி சோஷியல் மீடியாக்களில் தான் பதிவிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கடைசியாகப் போட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, “இனி பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பதிவிடப் போவதில்லை என்றும், என் அப்பா, அம்மா, சகோதரிகளுக்கு அது பிடிக்கவில்லை. ஏனென்றால் எனது உறவினர்கள் அவர்களை பயமுறுத்துகிறார்கள், நான் அமைதியாக இருப்பது அனைவருக்கும் நிம்மதியைத் தரும் என நினைக்கிறேன். அதனால் அப்படியே இருக்கட்டும்“ என அப்பதிவில் அவர் தெரிவித்திருந்தார்.
அல்போன்ஸ் புத்திரனின் இந்த முடிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ஏன் இப்படி முடிவுகள் எடுக்கிறார் என சமூக வலைதளங்களில் அவருக்கு கருத்துத் தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.