ஜோதிகா ரீ எண்ட்ரியில் நடித்த அனைத்துப் படங்களுமே மாஸ் ஹிட் தான். மிகவும் செலக்டிவான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கத்தில் பொன்மகள் வந்தாள் படத்தில் நடித்துள்ளார்.
ஹீரோயினை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தினை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது, மேலும் இப்படத்தினை இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கி உள்ளார்.
இப்படத்தில் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் போன்ற 5 மாபெரும் இயக்குனர்களும் நடித்துள்ளனர். பலரது எதிர்ப்பினையும் மீறி இன்று அமேசான் ப்ரைமில் பொன் மகள் வந்தாள் திரைப்படம் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தின் சிறப்புக்காட்சியை பார்த்துள்ள இயக்குனர் அட்லீ இந்தப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம் என்று கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, “பொன்மகள் வந்தாள் படம் இக்காலத்திற்கு தேவையான ஒரு படம். வலுவான திரைக்கதையால் மனங்களைக் கலங்கச் செய்யும் படம். உணர்ச்சி ரீதியான வசனங்கள் மிகப்பெரிய அளவில் ஸ்கோர் பண்ணிவிட்டது, இந்தப்படம் ஃப்ரெட்ரிக், ஜோதிகா மேம், சூர்யா சார், பார்த்திபன் சார் ஆகியோருக்கு பெரிய அளவில் பெயர் பெற்றுக் கொடுத்துள்ளது. நிச்சயம் இப்படத்தினை அனைவரும் பார்க்கவும்” என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் பொன்மகள் வந்தாள் படம் தன்னைக் கலங்கடித்ததாக இயக்குனர் பாரதிராஜா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.