வாழை படத்துல இவரைத் தவிர வேறு எந்த நடிகராலயும் நடிக்க முடியாது… திவ்யா துரைசாமி புகழாரம்…

By Meena

Published:

திவ்யா துரைசாமி தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஆவார். 2019ஆம் ஆண்டு இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் திவ்யா துரைசாமி. அடுத்ததாக 2021 ஆம் ஆண்டு மதில் திரைப்படத்தில் நடித்தார். பின்னர் 2022 ஆம் ஆண்டு குற்றம் குற்றமே அதே ஆண்டு எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன் ஆகிய படங்களில் நடித்து உள்ளார் திவ்யா துரைசாமி.

தற்போது இந்த வருடம் விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளி சமையல் போட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டு பிரபலமானார் திவ்யா துரைசாமி. தற்போது மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் வாழை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் திவ்யா துரைசாமி.

மாரி செல்வராஜ் தயாரித்து எழுதி இயக்கியிருக்கும் வாழை திரைப்படம். தற்போது திரையரங்குகளில் ஓடி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. மாரி செல்வராஜ் தனது வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பார். இத்திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் திவ்யா துரைசாமி நடித்து தனது நடிப்பிற்காக அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார்.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட திவ்யா துரைசாமி வாழை திரைப்படத்தில் நடித்த அனுபவத்தையும் உடன் நடித்த நடிகர்களை பற்றி பேசி உள்ளார். அதிலும் குறிப்பாக கலையரசன் அவர்களை பற்றி புகழ்ந்து பேசி உள்ளார் திவ்யா துரைசாமி. அவர் கூறியது என்னவென்றால், வாழை திரைப்படத்தில் நடிக்கும் போது நாங்க ரொம்பவே கஷ்டப்பட்டு வாழைத்தார தூக்கி நாங்க ஒரு ரெண்டு மூணு நாள் பிராக்டீஸ் பண்ணினோம். கரெக்டா அதை தலையில் வைத்து நடக்கிறதுக்காக பயிற்சி எடுத்துக்கிட்டோம். நார்மலா வாழத்தாரை வச்சு நடக்கிறது கஷ்டம் அதுல அந்த வயல்ல சேறு சகதியில நடக்குறது ரொம்பவே கஷ்டமா இருக்கும்.

அதேபோல கலையரசன் அவரைப்பற்றி நான் கேள்விப்பட்டுருக்கேன் இவ்ளோ சூப்பரா நடிப்பார்ன்னு நான் நேர்ல தான் பார்த்தேன். அந்த படத்துல அந்த கேரக்டர்ல அவர தவிர வேற யாராலயுமே எந்த நடிகராலையுமே நடிக்க முடியாது. ஏன்னா நடிப்பையும் தாண்டி அந்த படத்துக்காக நிறைய கஷ்டப்பட்டு இருக்காங்க. உழைச்சு இருக்காங்க. ஏன்னா வாழத்தார தலையில தூக்குறது அவ்வளவு ஈஸி கிடையாது. கழுத்து எலும்பெல்லாம் உடையிற மாதிரி இருக்கும். ஒரு வாழத்தாரே தூக்க முடியாது ஆனா கலையரசன் வந்து சூட்டிங்காக 4 5 வாழைத்தார தலையில தூக்கிக்கிட்டு நடந்தாரு. மத்தவங்க தூக்கும்போது சூட்டிங் ஸ்பாட்டில் ஹெல்ப் பண்ணுவாரு. அவ்வளவு ஒரு டேலண்ட்டான ஆக்டர் என்று கலையரசனை புகழ்ந்து பேசி இருக்கிறார் திவ்யா துரைசாமி.