பிக் பாஸ் 8: இப்படி தான் மோசமா சொல்லுவீங்களா.. ஆண்களுடன் சேர்ந்து சவுந்தர்யா, ஜெஃப்ரியை கமெண்ட் செஞ்ச தர்ஷா..

Jeffry, Soundariya and Dharsha Gupta : என்னதான் பிக் பாஸ் வீட்டிற்குள் ஜாலியாக ஏதாவது விஷயத்தை பேசிக் கொண்டிருந்தாலும் அதில் ஏதாவது ஒரு போட்டியாளர்கள் பயன்படுத்தும் வார்த்தையும் அதன் பின்னணியும் ரசிகர்கள் பலரையும்…

soundariya jeffry and dharsha

Jeffry, Soundariya and Dharsha Gupta : என்னதான் பிக் பாஸ் வீட்டிற்குள் ஜாலியாக ஏதாவது விஷயத்தை பேசிக் கொண்டிருந்தாலும் அதில் ஏதாவது ஒரு போட்டியாளர்கள் பயன்படுத்தும் வார்த்தையும் அதன் பின்னணியும் ரசிகர்கள் பலரையும் கொந்தளிக்க வைப்பதுடன் அதிகம் சர்ச்சையும் ஏற்படுத்தும். அந்த வகையிலான சில வார்த்தைகளை தான் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் தர்ஷா குப்தா மற்றும் சில ஆண்கள் பயன்படுத்தி அதிகம் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் களமிறங்க இதில் 17 பேர் ஏற்கனவே மக்கள் மத்தியில் ஒரு அளவுக்கு பரிஜ்ஜயம் உள்ளவர்கள் தான். ஆனால் அவர்கள் அனைவரையும் தாண்டி புதிய ஆளாக என்ட்ரி கொடுத்திருந்தார் ஜெஃப்ரி. இளம் வயதான அவர், பாடல்கள் எழுதி பாடி வருவதாகவும் தெரியும் சூழலில் பிக் பாஸ் வீட்டிலும் கூட ஆரம்பத்தில் அதிகம் கவனம் பெறவில்லை.

ஆனால் மெல்ல மெல்ல உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள் என்பதை பொருட்படுத்தாமல் யார் தவறு செய்தாலும் கொஞ்சம் கூட அதை யோசிக்காமல் தட்டி கேட்டும் வருகிறார் ஜெஃப்ரி. அங்கு இருக்கும் பலரை விட தான் வயது குறைந்தவராக இருந்தாலும் அவர்களை ஜெஃப்ரி கையாளும் விதமும், கேமை ஆடும் போக்கும் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

ஒவ்வொரு நாள் செல்ல செல்ல ஜெஃப்ரியின் ஆட்டமும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருவதால் நிச்சயம் அவர் இறுதிப் போட்டி வரை முன்னேறுவார் என்பதும் பலரின் கருத்தாக உள்ளது. பெண்கள் அணியில் இருக்கும் பலருடனும் ஒற்றுமையாக இருக்கும் ஜெஃப்ரி அனைவரையும் மனது புண்படாத அளவுக்கு கலாய்த்தும் பேசி வருகிறார். ஆண்கள் அணியில் கூட சத்யா, தீபக், முத்துக்குமரன் உள்ளிட்ட பலர் ஜெஃப்ரிக்கும் மிக நெருங்கிய நண்பர்களாகவும் உள்ளனர்.

இதனிடையே கடந்த சில தினங்களாக சௌந்தர்யாவுடன் தான் ஜெஃப்ரி அதிகம் சுற்றி வருகிறார். இருவரும் வேடிக்கையாக பாடல் பாடுவதும், நடனம் ஆடுவதும் என கடந்த சில தினங்களில் அலப்பறை பிக் பாஸ் வீட்டில் அதிகமாக இருந்து வருகிறது. அப்படி ஒரு சூழலில் அவர்கள் இருவரை குறித்தும் தர்ஷா குப்தா, சத்யா உள்ளிட்ட சிலர் இணைந்து பேசிய விஷயம் தற்போது மிகப்பெரிய அளவில் விவாதமாக மாறி உள்ளது.

ஜெஃப்ரி பின்னால் சவுந்தர்யா நடந்து போக, “கருப்பு காய் போகுது. சிகப்பு காயும் பின்னாடியே போகுதே” என தர்ஷா குப்தா மற்றும் ஆண்கள் சிலர் கலாய்த்து சிரிக்கின்றனர். இதே போல, ஜெஃப்ரி மற்றும் சவுந்தர்யா ஆகிய இருவருமே வீட்டிற்குள் ஒன்றாக சுற்றித் திரிவதாகவும் சத்யா, தர்ஷா உள்ளிட்ட பலரும் சிரித்துக் கொண்டே பேசுகின்றனர். இதில் ஜெஃப்ரியை கருப்பு என்றும், சவுந்தர்யாவை சிகப்பு என்றும் கூறி அனைவரும் கலாய்த்து சிரிப்பது ரசிகர்கள் மத்தியில் அதிக விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது.