நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் ஜனவரி 12-ந் தேதி திரையரங்குகளில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியிட உள்ளது. அதை தொடர்ந்து இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெற்றது. மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்துக்கு மெளன அஞ்சலி செலுத்திவிட்டு நிகழ்ச்சியை தொடங்கினார் தனுஷ்.
இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இவர் முன்னதாக ராக்கி, சாணிக்காகிதம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயிலர் படத்தில் நடித்த கன்னட நடிகர் சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன் டாக்டர், டான் படங்களில் நடித்த பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
கேப்டன் மில்லர் நிகழ்ச்சியில் தனுஷ் பேச்சு:
இந்நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து மாஸான என்ட்ரி கொடுத்தார். நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய தனுஷ் , சிறுதுளி பெருவெள்ளம் என ரசிகர்களை குறித்து தான் 2002ல் இருந்து சேர்த்த சிறு துளிகளெல்லாம் இன்று பெருவெள்ளமாக மாறியுள்ளது, இதுவே தான் சேர்த்த சொத்து எனக் கூறியுள்ளார்.
மேலும் கேப்டன் மில்லர் படத்தை பற்றி பேசிய தனுஷ், இப்படம் கடின உழைப்பால் உருவாகியுள்ளது. இப்படத்தின் இயக்குனரான அருண் மாதேஸ்வரனை பார்கும்போது வெற்றிமாறன் நினைவுக்கு வருவதாகவும், அவரை முதலில் பார்க்கும் போது இந்த தம்பியானு கதை கேட்ட 15 நிமிசம் கதை கேட்டதும் பெரிய பட்ஜெடா இருக்கே பண்ணமுடியுமானு கேட்டதுக்கு முடியும்னு தலையாட்டினாரு. நான் படம் பாத்ததும் இது சம்பவம் பண்ற கைனு புரிஞ்சிகிட்டேன்.
பொல்லாதவன் படத்துக்காக ஒரு இசையமைப்பாளரிடம் போறோம். ஆனால் வெற்றிமாறன் வெளிய வந்துட்டு அவர வேணான்னு சொல்லிட்டாறு அப்போ உள்ள வந்தவரு தான் ஜிவி பிரகாஷ். அவரது உருகுதே மருகுதே பாட்டு கேட்டு தான் அவர கூப்டோம்.
அப்பா பெயரை கெடுக்கக் கூடாது:
சிவராஜ்குமார் ஜெயிலர்ல மாஸ் என்ட்ரி கொடுக்கும் போதே தமிழ் நாட்டு மக்கள் மனதுல இடம் பிடிச்சிட்டாரு. அவர பாக்கும் போதேல்லாம் அவர் அப்பாவும் தம்பியும்தான் ஞாபகம் வராங்க . அப்பா பெயர எப்படி காப்பத்துனும்னு உங்கக்கிட்ட தான் கத்துகனும் என்னுடைய பசங்களும் இங்க தான் இருக்காங்க கத்துப்பாங்க என பேசியுள்ளார்.
கேப்டன் மில்லர் படத்தின் டேக் லைன் Respect is Freedom . தமிழில் மரியாதைதான் சுதந்திரம். ஆனால் இங்கு மரியாதையும் சுதந்திரமும் யாருக்கு இருக்கிறது என்று தெரியவில்லை. எதை செய்தாலும் யோசித்து யோசித்து செய்ய வேண்டியதாக உள்ளது. அப்படியே யோசித்து செய்தாலும், அது நல்லதாகவே இருந்தாலும் அதை குறை சொல்வதற்கு ஒரு கூட்டமே இருக்கிறது. எண்ணம் போல் வாழ்க்கை , எண்ணம் போல் தான் வாழ்க்கை என பேச அரங்கமே அதிர்ந்தது.