பட்டாக் கத்திகளில் பிறந்த நாள் கேக் வெட்டுவது சட்டப்படி தவறு என போலீசார் அவ்வப்போது எச்சரிக்கை செய்தும் இதுபோன்ற சில சம்பவங்கள் ஒருசில இடங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நெல்லை அருகே உடையார்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த தனுஷ் ரசிகர் ஒருவர் நேற்று பட்டாக்கத்தியால் கேக் வெட்டி ’ஜகமே தந்திரம்’ மோஷன் போஸ்டரை கொண்டாட முயற்சி செய்தபோது போலீசார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்
அவர் மீதான குற்றம் நிரூபணம் ஆனால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது