50வது படத்துக்கு பிறகு இப்படி மாறிட்டாரே! அதிர வைக்கும் தனுஷ் பற்றிய தகவல்!

தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக தற்போது வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். சரியான கதைகளை தேர்ந்தெடுத்து தனது அபாரமான நடிப்பால் சமீப காலமாக பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் தனுஷ்.…

Dhanush D50

தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக தற்போது வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். சரியான கதைகளை தேர்ந்தெடுத்து தனது அபாரமான நடிப்பால் சமீப காலமாக பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் தனுஷ்.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமாகி ராயன் படம் வரை இவருடைய அடுத்தடுத்த பரிமாணங்களை நாம் பார்க்க முடிகிறது.ஒவ்வொரு காலகட்டத்திலும் தனுஷின் மாற்றங்களை அறிந்து கொள்ள முடிகிறது.

சமீப காலமாக இவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் வித்தியாசமாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது. அதன் மூலம் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கிறார் தனுஷ். தற்போது தனது ஐம்பதாவது படமான ராயன் படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றார்.

இதற்கடுத்தபடியாக இளையராஜாவின் பயோபிக்கிலும் நடிக்க இருக்கிறார். இப்போது தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா உடன் சேர்ந்து ஒரு படத்தில் பணிபுரிந்து வருகிறார் தனுஷ். இந்த நிலையில் தனுஷை பற்றிய ஒரு செய்தி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

அதாவது தனுஷ் இப்போது அவர் நடிக்கும் படங்களுக்கு 50 நாட்கள் மட்டுமே கால்சீட்டு கொடுப்பதாகவும் அந்த படத்திற்கு 50 கோடி வீதம் ஒரு நாளைக்கு ஒரு கோடி என்ற கணக்கில் சம்பளம் வாங்குவதாகவும் சொல்லப்படுகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போய் நிற்கின்றனர். கிட்டத்தட்ட விஜய் அஜித் இவர்களுக்கு இணையான சம்பளத்தில் இப்போது தனுஷும் நெருங்கி இருக்கிறார் என்பது ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இவருடைய படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவரும் வகையிலேயே அமைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.