இவரால் தான் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது… ஓப்பனாக பேசிய பிரித்விராஜ்…

பிரித்விராஜ் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தை பூர்வீகமாக கொண்டவர். இவரது தந்தை சுகுமாரன் மற்றும் தாயார் மல்லிகா சுகுமாரன் ஆகிய இருவரும் மலையாள சினிமாவின் நடிகர் மற்றும் நடிகை ஆவார். மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி…

Prithviraj

பிரித்விராஜ் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தை பூர்வீகமாக கொண்டவர். இவரது தந்தை சுகுமாரன் மற்றும் தாயார் மல்லிகா சுகுமாரன் ஆகிய இருவரும் மலையாள சினிமாவின் நடிகர் மற்றும் நடிகை ஆவார். மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார் பிரித்விராஜ்.

2002 ஆம் ஆண்டு தனது 19 வது வயதிலே ‘நந்தனம்’ திரைப்படத்தின் வாயிலாக மலையாள சினிமாவில் அறிமுகமானார். 2005 ஆம் ஆண்டு ‘கனா கண்டேன்’ திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்ததாக 2007 ஆம் ஆண்டு ‘பாரிஜாதம்’ என்ற திரைப்படத்தில் நடித்தார்.’

‘பாரிஜாதம்’ திரைப்படத்தில் தான் கே.பாக்யராஜ் அவர்களின் மகள் சரண்யா பாக்கியராஜ் நடிகையாக முதலும் கடைசியுமாக நடித்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ஜோதிகாவுடன் இணைந்து ‘மொழி’ திரைப்படத்தில் நடித்திருந்தார் பிரித்விராஜ். இப்படத்தில் ஜோதிகா காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்திருந்தார். இத்திரைப்படம் நல்ல விமர்சங்களைப் பெற்று பிரபலமானார் பிரித்விராஜ்.

தொடர்ந்து ‘கண்ணாமூச்சி ஏனடா’, ‘வெள்ளித்திரை’, ‘நினைத்தாலே இனிக்கும்’ போன்ற திரைப்படங்களில் நடித்தார் பிரித்விராஜ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஆடுஜீவிதம்’ படம் வெற்றிப் பெற்றது. தனது அபாரமான மற்றும் யதார்த்தமான நடிப்பிற்காக ரசிகர்களைக் கொண்டவர் பிரித்விராஜ்.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட பிரித்விராஜ், நான் இப்போது நல்ல நடிகன் என்ற பெயர் வாங்கியிருக்கலாம், ஆனால் நான் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்ததற்கு காரணம் என் அப்பா தான். அவர் ஒரு நடிகர் என்பதால் திரையுலகில் நுழைய எனக்கு எளிதாக இருந்தது. எனக்கு கிடைத்த வாய்ப்பு என்னை விட சிறப்பாக நடிப்பவர்களுக்கு கிடைத்திருந்தால் அவர்கள் இன்று மிகப்பெரிய நடிகராக வந்திருக்கலாம் என்று ஓப்பனாக பேசியுள்ளார் பிரித்விராஜ்.