தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான நானே வருவேன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் கைகோர்த்துள்ள தனுஷ்,தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் ‘வாத்தி’ படத்தில் நடித்து வருகிறார்.தெலுங்கு பதிப்பிற்கு ‘சார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.இப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது .படக்குழுவின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
அடுத்ததாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அருண் மதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்திலும் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ். கேப்டன் மில்லர் படத்தின் பூஜையிலும் தனுஷ் வெள்ளை வெட்டி சட்டையில் வந்தது குறிப்பிடத்தக்க்கது.
இந்நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா, நடிகர் தனுஷுடன் தனது படத்த்தின் பூஜையை இன்று தொடங்கியுள்ளார். படத்தின் துவக்க விழா இன்று ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை சோனாலி நரங் வழங்குகிறார், இது இன்று பூஜையுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது, படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியாகவுள்ளது.
பொன்னியின் செல்வன் பட பிடிப்பில் கலந்து கொண்ட திரிஷா! வெளியான கலக்கல் புகைப்படம்!
அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பியின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான சுனில் நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோரால் பிரமாண்டமாக தயாரிகின்றனர்.
The Remarkable Moment is here for the Path Breaking Combo
Superstar @dhanushkraja Director @sekharkammula TRILINGUAL FILM Launched today on a Grand Note with a pooja ceremony
FILMING BEGINS SOON
#NarayanaDasNarang @AsianSuniel @puskurrammohan @SVCLLP #AmigosCreations pic.twitter.com/NfokZrA6Br
— Sree Venkateswara Cinemas LLP (@SVCLLP) November 28, 2022