இயக்குனர் கௌதம் மேனன் தற்போது பல படங்களில் பிசியாக அதுவும் வில்லனாக மிரட்டி வருகிறார். அதே வேளையில் அவர் இயக்கிய துருவ நட்சத்திரம் பட புரொமோஷன் வேலைகளும் பிசியாக உள்ளது.
ஏப்ரல் 11ம் தேதி இந்தப் படம் வருகிறது. நீண்ட நாள்களாக இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி தள்ளிப் போக ஒரு வழியாக இப்போது அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு

இந்நிலையில், தனுஷூக்கும், எனக்கும் செட்டாகாது என்று இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். அவர் தற்போது நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதுகுறித்து சமீபத்தில் அவர் பேட்டி ஒன்றில் இவ்வாறு வெளிப்படையாகக் கூறினார். இது பல்வேறு சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.
தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை இயக்கியவர் கௌதம் மேனன். தமிழ், தெலுங்கு, இந்தியில் பல படங்களை இயக்கியுள்ளார்.
ரொமாண்டிக் இயக்குனர் என்று சொல்லும் வகையில் பல ரொமாண்ஸ் படங்களை இயக்கி வணிகரீதியாக வெற்றிப்படங்களைத் தந்துள்ளார். ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, பச்சைக்கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு ஆகிய படங்கள் இவரது இயக்கத்தில் குறிப்பிடத்தக்கவை. எல்லாமே சக்கை போடு போட்டன. அது மட்டும் அல்லாமல் தமிழ்ப்படங்களில் சிலவற்றை தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்துள்ளார்.
இதையும் படிங்க… மகளை ஹீரோயினாக அறிமுகப்படுத்துகிறாரா ஊர்வசி!.. இவருக்கு இப்படியொரு பொண்ணா?..
நடுநிசி நாய்கள், வெப்பம், தங்க மீன்கள், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இவை எல்லாமே பிளாப்பானது. அந்தக் கடன்சுமையைக் குறைக்க பல படங்களில் நடித்தாராம். நீண்ட இடைவெளிக்குப் பின் வெந்து தணிந்தது காடு கம்பேக் கொடுத்தது.
எனை நோக்கி பாயும் தோட்டா படு தோல்வியானது. இது ஒரு காதல் திரில்லர் படம். இதுகுறித்து கௌதம் மேனன் சமீபத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் லேட்டானதால் தனுஷ் அப்செட்டாகி விட்டார்.
அவருக்கும் எனக்கும் இடையில் வைப் செட் ஆகவில்லை. ஆனால் அப்படத்தின் படப்பிடிப்பின்போதே ஏதோ குறை இருப்பது போல தோன்றியது. இருந்தாலும் ஏதாவது அதிசயம் நடக்கும் என்ற நம்பிக்கையில் படத்தை ரிலீஸ் செய்தேன்; என்றார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


