குட்டிப்புலி படம் மூலம் அறிமுகமானவர் முத்தையா. இப்படத்தில் விருதுநகர் மாவட்டம் சார்ந்த ஒரு கதையை கையிலெடுத்திருந்தார் இப்படம் நல்லதொரு வெற்றியை பெற்றது.
இவரின் படங்கள் எல்லாம் ரத்தமும் சதையுமான கதைகளாகவே இருக்கும்.மருது, கொம்பன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இவரின் படங்கள் எல்லாம் அதிரடியாகவும் அதே நேரத்தில் மதுரையையும் அதை சுற்றிய மாவட்டங்களையும் கொண்டே கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும்.
இவரின் படங்களுக்கு தென்மாவட்டங்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகமுண்டு.
இவர் சிறிய இடைவெளிக்கு பிறகு கெளதம் கார்த்திக்குடன் இணைகிறார். கடந்த வருடம் வந்த தேவராட்டம் படம் தான் இருவருக்கும் கடைசியாக வந்த படமாக இருக்கிறது.
தற்போது குற்றம் 23 தயாரிப்பாளரான இந்தர்குமார் தயாரிப்பில் முத்தையா புதிய படம் இயக்குகிறார். இதில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார்.
நாயகியாக லட்சுமி மேனனை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.