கடந்த 1989ம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் மாப்பிள்ளை. ரஜினிகாந்த், அமலா நடிப்பில் பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் நடித்திருந்தார். அவர்தான் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.
அப்போதைய ஹிட் மற்றும் பிரமாண்ட இயக்குனர் ராஜசேகர் இப்படத்தை இயக்கி இருந்தார். ரஜினியின் எதிர்காலம் தமிழ்நாட்டு மக்கள், ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் மாஸ் உள்ளிட்டவைகளை வெளிப்படுத்தும் டயலாக் இப்படத்திலேயே வந்து விட்டது ஒரு காட்சியில் ஸ்ரீ வித்யாவிடம் கண்ணாடியை மாட்டியபடியே பேசும் ரஜினி என்னை இந்த தமிழ்நாட்டுக்கே விடுங்க அத ஏன் என் வாயாலேயே சொல்லிக்கிட்டு என ஸ்டைலாக வசனம் பேசுவார்.
ரஜினி நடித்த மாஸ் ப்ளாக்பஸ்டர் படங்களில் இப்படம் முக்கியமான படமாகும். மிக ஸ்டைலாக யங் லுக்கோடு இப்படத்தில் ரஜினி தோற்றமளிப்பார். காட்சிகளும் பாடல்களும் கலர்புல்லாக இருந்தன.
சண்டைக்காட்சிகள் செம மாஸ் ஆக இருந்தன. இளையராஜாவின் இசையில் மானின் இரு கண்கள் கொண்ட, உனைத்தான் நித்தம் நித்தம்,என்னோட ராசி நல்ல ராசி, என்னதான் சுகமோ நெஞ்சிலே உள்ளிட்ட பாடல்கள் சிறப்பாக வந்திருந்தன.
படத்தயாரிப்பாளர் சிரஞ்சீவி ஒரே ஒரு சீனில்தான் வருவார் அதில் பட்டைய கிளப்பி இருப்பார்.
படத்தில் வில்லன் இல்லை மாமியாராக வரும் ஸ்ரீ வித்யாதான் படத்தின் வில்லி ரஜினிக்கும் இவருக்குமான ஸ்டைலான மாஸ் காட்சிகள் பரபரப்புடன் விளங்கியது.
இப்படம் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது
இப்படத்தை உல்டா செய்கிறேன் என சில வருடங்களுக்கு முன் தனுஷ் நடிக்க இதே கதையை கொஞ்சம் மாற்றி எடுத்து வைத்திருந்தனர். ரஜினியின் மாப்பிள்ளையில் இருந்த சிறு மாஸ் கூட மருமகன் தனுஷின் மாப்பிள்ளையில் இல்லை. தேவையில்லாமல் எடுத்து ஒரிஜினல் மாப்பிள்ளையை சிதைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.