உட்கார்ந்தபடியே நடனம் ஆடி ரம்ஜான் வாழ்த்து சொன்ன டிடி!!

திவ்யதர்சினி  விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார், தன்னுடைய 10 வது வயதில் தொகுப்பாளினியாக சன் தொலைக்காட்சியில் அறிமுகமாகி, ஏறக்குறைய 25 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக தொடர்ந்து இருந்து வருகிறார். இவர்…

திவ்யதர்சினி  விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார், தன்னுடைய 10 வது வயதில் தொகுப்பாளினியாக சன் தொலைக்காட்சியில் அறிமுகமாகி, ஏறக்குறைய 25 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக தொடர்ந்து இருந்து வருகிறார்.

இவர் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், நம்ம வீட்டுக் கல்யாணம், ஜோடி சீசன் 7, கெட் செட் கோ, மற்றும் காபி வித் டிடி  என பல நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக உள்ளார். மேலும் இவர் அவர் படித்த ஆதர்ஷ் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியும் வருகிறார். வெள்ளித் திரையிலும் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார்.

c307de6d90c4cc83d07242605f1e25b4

தற்போது கொரோனாவால் ஊரடங்கில் சினிமா மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது ஓய்வில் இருந்துவரும் டிடி என்னும் திவ்யதர்சினி   தனது பழைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

அந்தவகையில் நேற்று உலகம் முழுவதும் ரம்ஜான் கொண்டாடிய இஸ்லாம் மக்களுக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளார். அதாவது வீடியோவில் வீட்டில் தொழுகை செய்து, அதன்பின்னர் ஜோதா அக்பர் படத்தின் பாடலுக்கு அமர்ந்தபடியே நடனம் ஆடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய பேவரைட் சாங்க் இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன