ஜோதிடம்

ஜென்ம நட்சத்திரத்தில் செய்யக்கூடாதவை எவை?!

7e7612e0f425dbdef035fc40180898d4

ஒருவர் பிறக்கும்பொழுது உடல், மனோகாரகன் சந்திரன் இருக்கும் நட்சத்திரம் அவரின் ஜென்ம நட்சத்திரம், அந்த நட்சத்திரம் எந்த ராசியில் உள்ளதோ அதுவே ஜென்ம ராசி ஆகும். ராசி மண்டலத்தில் 12 ராசிகளில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் , இவற்றில் 3 நட்சத்திரங்களுக்கு ஒரு கிரகம் என்ற கணக்கில் 9 கிரகங்கள் அதிபதியாக உள்ளன.

நட்சத்திரங்கள் – அதிபதி
அஸ்வினி மகம் மூலம் – கேது

பரணி பூரம் பூராடம் – சுக்கிரன்
கார்த்திகை உத்திரம் உத்திராடம் – சூரியன்
ரோகினி ஹஸ்தம் திருவோணம் – சந்திரன்
மிருகசீரிஷம் சித்திரை அவிட்டம் – செவ்வாய்
திருவாதிரை சுவாதி சதயம் – ராகு
புனர்பூசம் விசாகம் பூரட்டாதி – குரு
பூசம் அனுஷம் உத்திரட்டாதி – சனி
ஆயில்யம் கேட்டை ரேவதி – புதன்

எடுத்துக்காட்டாக ஒருவர் பூர நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அது ஜென்ம நட்சத்திரமாகும் . பூராடம், பரணி அவரின் அனுஜென்ம, திரி ஜென்ம நட்சத்திரங்கள் ஆகும்.

ஜென்ம நட்சத்திரத்தில் செய்ய வேண்டியவை
குலதெய்வ, இஷ்டதெய்வ வழிபாடு , புத்தாடை அணிதல், அன்னதானம், தானதர்மங்கள் செய்தல், நிலம், சொத்துகள் வாங்குதல், பதவியேற்பது போன்றவற்றை செய்யலாம்.

ஜென்ம நட்சத்திரத்தில் தவிர்க்க வேண்டியவை
திருமணம், சீமந்தம், முடி இறக்குதல், காது குத்து, எண்ணெய் ஸ்நானம் ( எண்ணெய் குளியல்), தாம்பத்தியம், மருந்து உண்ணுதல், அறுவை சிகிச்சை போன்ற உடல் தொடர்பான விசயங்கள் செய்வதை தவிர்க்கலாம்.

Avatar photo
Staff