தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கிளாமர் டான்ஸ் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். குறிப்பாக 80கள் காலத்தில் சில்க் ஸ்மிதா, ஜோதிலட்சுமி, அனுராதா உள்பட ஒரு சில நடிகைகள் ஏராளமான திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினர்.
அந்த வகையில் கவர்ச்சியான பாடலுக்கு நடனமாடி வந்த சில்க் ஸ்மிதாவுக்கு போட்டியாக களம் இறக்கப்பட்டவர் தான் அனுராதா. அவர் சுமார் 700 படங்களில் நடித்துள்ளார். அதில் பாதிக்கு மேல் ஒரு பாடல் நடனம் என்பது குறிப்பிடத்தக்கது.
புன்னகை நடிகை ஸ்ரீவித்யாவை ஏமாற்றிய கணவர், சகோதரர்.. மரணப்படுக்கையில் கூட துரோகம்..!
தமிழில் மட்டும் 105 படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் 71 படங்களும், கன்னடத்தில் 18 படங்களும், ஹிந்தியில் நான்கு படங்களும், தெலுங்கில் 16 படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி அவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது கூட சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
நடிகை அனுராதா டான்ஸ் மாஸ்டர் சதிஷ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அபிநயா ஸ்ரீ மற்றும் காளிச்சரண் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். அபிநயாஸ்ரீ, விஜய் நடித்த ‘பிரண்ட்ஸ்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
நடிகை அனுராதா அந்த காலத்திலேயே போல்டானவர் என்று பெயர் எடுத்தவர். அவர் ஒரு மோட்டார் சைக்கிள் பிரியர் என்பதும் குறிப்பாக ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்றவர். மேலும் இவர் தனது சண்டைக் காட்சிகளில் எந்தவிதமான டூப் நடிகரும் இன்றி நடித்துள்ளார்.
நடிகை அனுராதா நாயகியாக நடித்தது ஒரே ஒரு திரைப்படம் தான். ஆனால் அந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை என்பது சோகமானதாகும். ’காதலிக்க 90 நாள்’ என்ற படத்தில் அவர் நடிகர் ரவிச்சந்திரன் ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் நாகேஷ், ஜெமினி கணேசன், மனோரமா, சுகுமாரி உள்பட பலர் நடித்தனர். பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் சில பிரச்சனைகள் காரணமாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணமாகி குழந்தை பெற்ற பின் காதல்.. தற்கொலை முயற்சி.. என்ன நடந்தது அல்போன்சா வாழ்க்கையில்..?
கடந்த 1996ஆம் ஆண்டு அனுராதாவின் கணவர் சதீஷ்குமார் விபத்து ஒன்றில் சிக்கினார். கிட்டத்தட்ட 11 வருடங்கள் அவர் சிகிச்சையில் இருந்தார் என்பதும் அப்போது அவரை ஒரு குழந்தை மாதிரி அனுராதா தான் பார்த்துக் கொண்டார். இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு அவருடைய கணவர் காலமானார்.
அனுராதாவும் சில்க் ஸ்மிதாவும் தொழில் அளவில் போட்டியாக இருந்தாலும் இருவரும் நெருங்கிய தோழிகள் என்பது பலருக்கு தெரியாத உண்மை. அனுராதாவால் ஸ்மிதாவின் மார்க்கெட் குறைந்து விட்டதாக பலர் பேசினாலும் இருவரும் அவ்வப்போது சந்தித்து தங்களது நட்பை வலுப்படுத்தி கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நடிகருக்கு அம்மா-மகள் ஜோடி.. ஒரே நடிகருக்கு அம்மா-மகளாக நடித்த நடிகைகள்..!
நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்வதற்கு முந்தைய நாள் அனுராதாவிடம் போனில் பேசியதாகவும் ’உன்னிடம் அவசரமாக பேச வேண்டும் உடனே வீட்டுக்கு வா’ என்று அழைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் ’தற்போது என்னால் வர முடியாது நாளை வருகிறேன்’ என்று அனுராதா கூறியுள்ளார். ஆனால் மறுநாள் பரிதாபமாக சில்க் ஸ்மிதா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். ஒருவேளை நான் சில்க் ஸ்மிதாவை அன்றைய தினம் நேரில் பார்த்திருந்தால் அவருடைய தற்கொலையை நான் தடுத்திருப்பேன் என்று பல பேட்டிகளில் அனுராதா கூறியுள்ளார்.