அலிபாபாவும் 40 திருடர்கள் முதல் விஸ்வரூபம் 2 வரை.. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற வஹிதா ரஹ்மான் யார்..?

தாதா சாகேப் பால்கே விருது பழம்பெரும் நடிகை வஹிதா ரஹ்மான் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு தமிழ் திரை உலகினர் உள்பட இந்திய திரை உலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 85 வயதான வஹிதா…

waheeda rehman

தாதா சாகேப் பால்கே விருது பழம்பெரும் நடிகை வஹிதா ரஹ்மான் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு தமிழ் திரை உலகினர் உள்பட இந்திய திரை உலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

85 வயதான வஹிதா ரஹ்மான் தமிழில் சில படங்கள் நடித்துள்ளார். குறிப்பாக கடந்த 1956 ஆம் ஆண்டு எம்ஜிஆர், பானுமதி நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். கடைசியாக இவர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் 2 என்ற படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

நடிகை வஹிதா ரஹ்மான் தமிழகத்தை சேர்ந்த செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர். சிறுவயதிலேயே இவர் கலை மற்றும் இலக்கியம் மீது ஆர்வம் கொண்டிருந்த நிலையில் முதன்முதலாக வஹிதா ரஹ்மான் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்.

14 வயதில் அறிமுகம்.. 16 வயதில் தேசிய விருது.. 22 வயதில் எதிர்பாராத மரணம்.. புகழின் உச்சம் சென்ற நடிகை..!

1955 ஆம் ஆண்டு வெளியான ரோஜுலு மராயி என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். அதனை அடுத்து அவர் என்டி ராமராவ் நடித்த ஜெயசிம்ஹா என்ற திரைப்படத்தில் இளவரசி கேரக்டரில் நடித்திருந்தார். இதன் பிறகு தான் அவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைத்தது.

எம்ஜிஆர், பானுமதி நடிப்பில் டி ஆர் சுந்தரம் இயக்கத்தில் உருவான அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற திரைப்படத்தில் சலாம் பாபு சலாம் பாபு என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். இந்த பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

பின்னர் அவர் இந்தி திரை உலகிற்கு சென்றார். முதன் முதலாக 1956 ஆம் ஆண்டு ’சிஐடி’ என்ற திரைப்படத்தில் காமினி என்ற கேரக்டரில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் அவர் ஏராளமான இந்தி திரைப்படங்களில் நடித்தார்.

எம்ஜிஆர், சிவாஜியை விட அதிக சம்பளம்.. தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி டிஆர் ராஜகுமாரி..!

1956-ம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 16 வருடங்கள் ஹிந்தி திரை உலகில் மட்டுமே பல திரைப்படங்களில் நடித்தார். இதில் ரேஷ்மா அவர் ஷேரா என்ற திரைப்படத்தில் அவர் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது கிடைத்தது.

ஹிந்தி மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு, பெங்காலி மொழி திரைப்படங்களிலும் நடித்தார். விஸ்வரூபம் 2 என்ற திரைப்படத்தில் அவர் கமல்ஹாசனின் அம்மாவாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவரது நடிப்பை கமல்ஹாசனே பாராட்டினார்.

நடிகை வஹிதா ரஹ்மான் கடந்த 1974 ஆம் ஆண்டு ஷாஷி ரேகி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்து சில படங்களில் நடித்த நிலையில் காதல் உண்டாகி அதன் பிறகு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் பெங்களூரில் வாழ்ந்து வந்த வஹிதா ரஹ்மான் கடந்த 2000 ஆண்டு கணவரின் இறப்புக்கு பின்னர் அவர் மும்பை சென்று விட்டார். தற்போது அவர் மும்பையில் தான் இருந்து வருகிறார்.

பாதி படப்பிடிப்பில் மறைந்த பீம்சிங்.. லட்சுமியின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படத்தின் கதை..!!

தாதா சாகிப் பால்கே விருது, தேசிய விருது மட்டுமின்றி அவர் ஏராளமான பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார். கடந்த 1972 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.