குக் வித் கோமாளி அஸ்வினிற்கு திருமணம்! பொண்ணு யாரு தெரியுமா..

சின்னத்திரையில் பிரபலமடைந்து தற்பொழுது வெள்ளித்திரையில் ஹீரோவாக வலம் வரும் முன்னணி இளம் நடிகர் தான் அஸ்வின் குமார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி தயாரிப்புகளிலும் தற்பொழுது நடித்து வருகிறார். ஸ்டார்…

shivangiandashwinrockingphotos2 1620993501

சின்னத்திரையில் பிரபலமடைந்து தற்பொழுது வெள்ளித்திரையில் ஹீரோவாக வலம் வரும் முன்னணி இளம் நடிகர் தான் அஸ்வின் குமார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி தயாரிப்புகளிலும் தற்பொழுது நடித்து வருகிறார்.

ஸ்டார் விஜய் சீரியல்களான ரெட்டை வால் குருவி மற்றும் நினைக்க தெரிந்த மனமே ஆகிய இரு தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். மேலும் ஓ காதல் கண்மணி படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார். அடுத்ததாக ஆதித்ய வர்மா படத்தில் துருவ் விக்ரமின் சகோதரனாக நடித்திருந்தார் .

அதை தொடர்ந்து என்ன சொல்ல போகிறாய், மீட் க்யூட், செம்பி ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

பிரபல சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 2 வில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சி அவரை மேலும் பிரபலமடைய செய்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்தது. அந்த சீசனில் அவருக்கும் பாடகி சிவாங்கிக்கும் இடையே ஆனா காட்சிகள் ரசிகர்களால் கொண்டாப்பட்டது.

வாரிசு படத்தின் சாதனையை முறியடித்த சிவகார்த்திகேயனின் மாவீரன்!

இந்நிலையில் நடிகர் அஸ்வினுக்கு திருமணம் நடைபெற போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்பொழுது மணப்பெண் பாடகி சிவாங்கியாக இருக்குமோ என பலர் நினைத்திருக்கலாம். ஆனால் அது தான் இல்லை.

நடிகர் அஸ்வினுக்கு பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மகளுடன் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் யார் அந்த தயாரிப்பாளர் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை. மேலும் திருமண நாள் குறித்து தகவல்கள் வெளியாகும் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.