வாரிசு படத்தின் சாதனையை முறியடித்த சிவகார்த்திகேயனின் மாவீரன்!

மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த திரைப்படம் மாவீரன். இந்த படத்தில் அதிதி சங்கர், இயக்குனர் மிஷ்கின், புஷ்பா பட வில்லன் சுனில், நகைச்சுவை நடிகர் யோகி பாபு, குக் வித் கோமாளி பிரபலம் மோனிஷா, முன்னணி நடிகை சரிதா என பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஷ்வா தயாரித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்தது. படம் வெளியான முதல் நாளிலே பாக்ஸ் ஆபிஸில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில் வெளிநாடுகளில் விஜய் நடித்த வாரிசு படத்தின் வசூல் சாதனையை மாவீரன் திரைப்படம் முறியடித்துள்ளது. மேலும் படம் வெளியான 3 நாள் முடிவிலேயே 43 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருந்த நிலையில் நான்காம் நாளிலும் 7 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து உலக அளவில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளி உள்ளது.

சிவகார்த்திகேயனின் மாவீரன் கதை காப்பி அடிக்கப்பட்ட கதையா.. யாரு இந்த வேலையை செய்தது தெரியுமா?

தற்பொழுது இந்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாவீரன் திரைப்படம் வார நாட்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் இரண்டாம் வார முடிவில் 100 கோடி வசூலை எட்டி டாக்டர் மற்றும் டான் ஆகிய திரைப்படங்களின் பட்டியலில் மாவீரன் திரைப்படம் விரைவில் இணைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...