இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வந்த திரைப்படம் எந்திரன். சிவாஜி படம் முடித்த கையோடு ரஜினி நடித்த பிரமாண்ட படம். இது போல கதையம்சமுள்ள படம் தமிழுக்கும் ரசிகர்களுக்கும் புதிது.

ஆங்கில படங்களில் நாம் பார்க்கும் பல காட்சிகளை முதன் முதலாக தமிழுக்காக காட்சிப்படுத்தி இருந்தார் இயக்குனர் ஷங்கர். இதற்காக ஹாலிவுட் கலைஞர்கள் பலர் படத்தில் பணியாற்றினர்.
ஒரு விழாவில் அப்போது அவரது குருநாதர் பாலச்சந்தரால் ரஜினி இது போல நடித்ததற்காக பாராட்டப்பட்டார்.
ரஜினி ரசிகர்களை பெரிதும் இப்படம் கவர்ந்து இருந்தது. எந்திர மனிதன் சிட்டியாக ரஜினி நடித்து இருந்தார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க இயக்குனர் ஷங்கர் இயக்கி இருந்தார்.
இப்படம் வெளியாகி நேற்று அக்டோபர் 1ம் தேதியுடன் 9 வருடங்கள் நிறைவடைகிறதாம்.