பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வனிதா, ஏற்கனவே ஷெரினுக்கும் தர்ஷனுக்கும் காதல் இருப்பதாகவும், இதனால் தர்ஷனின் வெற்றி வாய்ப்பு பறிபோகும் என்றும் எச்சரித்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் தர்ஷன் வெளியேறியதை அடுத்து இன்று வனிதா உள்பட ஐவர் பிக்பாஸ் வீட்டின் சிறப்பு விருந்தாளியாக வருகை தந்துள்ளனர்.
பிக்பாஸ் வீட்டிற்கு வந்தவுடன் முதல் வேலையாக ‘தர்ஷன் வெளியே போனதற்கு காரணம் நீதான் என ஷெரினை குறிப்பிட்டு கூறியதால் பிக்பாஸ் வீட்டில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
வனிதா கூறியதை கேட்டு ஷெரின் ஒருபுறம் அழுகையுடன் வெளியேற, சாக்சி அவரிடம் சண்டைக்கு செல்கிறார். ’நீங்கள் சொல்வதால் உண்மை பொய்யாகாது, பொய் உண்மையாகாது என்று கூறி வனிதாவிடம் சாக்சி வாக்குவாதம் செய்கிறார்.
மொத்தத்தில் நேற்று வரை அமைதியாகவும் நிம்மதியாகவும் இருந்த போட்டியாளர்கள் இன்று வனிதாவின் வருகைக்கு பின் நிம்மதியை இழந்துள்ளனர்.