வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி எப்போதுமே வெற்றிக்கூட்டணிதான் பொல்லாதவன், ஆடுகளம் என இவர்களின் காம்பினேஷன் படங்கள் எல்லாம் வெற்றிப்படங்கள்தான். வடசென்னை மட்டும் கொஞ்சம் சறுக்கியது.
வடசென்னை முடித்த கையோடு இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்தார் தனுஷ், கடந்த சில வருடங்களாக தனுஷின் படங்கள் பெரிய அளவில் ரீச் கிடைக்காத நிலையில் இப்படத்தில் நடித்துள்ளார் தனுஷ். இதில் இரண்டு கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் நடிப்பில் எனை நோக்கி பாயும் தோட்டா வராமல் இழுத்துக்கொண்டே செல்கிறது இப்படி இருக்கையில் அசுரன் படம் வெளியாவது தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.