பிக்பாஸ் வின்னர் சாண்டிதான்: ஷெரின் கணிப்பு

By Staff

Published:

5413135eac702fdf58dc9164e22edc07

பிக்பாஸ் வின்னர் யார்? என்ற கேள்விக்கு இன்னும் ஒருசில நிமிடங்களில் விடை தெரிந்துவிடும் என்றாலும் சற்றுமுன் வெளியே வந்த ஷெரின், ‘சாண்டி தான் இந்த நிகழ்ச்சியின் வின்னர் என்று கணித்துள்ளார்.

முதல் நாளில் இருந்தே சாண்டி உற்சாகமாக இருப்பதாகவும், அவருக்குத்தான் அதிக வாய்ப்பு என்றும் கூறினார். முகின் இடையில் சில நாட்கள் சோர்ந்து போனாலும் அதன்பின்னர் பிக்கப் ஆகிவிட்டதால் இரண்டாவது வாய்ப்பு முகினுக்கு என்று ஷெரின் கணித்துள்ளார்.

அதேபோல் லாஸ்லியாவை தான் மிகவும் விரும்புவதாகவும், இருப்பினும் அவருடைய விளையாட்டு மற்ற இருவரையும் ஒப்பிடும்போது குறைவானதாக இருந்ததாகவும் ஷெரின் கணித்துள்ளார். மக்களின் கணிப்பும், ஷெரின் கணிப்பும் ஒரே மாதிரியாக இருக்கின்றதா? என்பதை இன்னும் சற்று நேரத்தில் பார்ப்போம்

Leave a Comment