பிக்பாஸ் நிகழ்ச்சியில் வின்னர் யார் என்பதை அறிவிப்பதற்கு முன்னரே மூன்றாவது இடம் பிடிப்பவரை அறிவிப்பதுண்டு. கடந்த இரண்டு சீசன்களிலும் அதுதான் நடந்தது. அந்த வகையில் பிக்பாஸ் வின்னர் பெயரை அறிவிக்கும் முன் மூன்றாவது இடம் பிடித்தவர் யாருக்கு என்பதை ஸ்ருதிஹாசன் பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறார்.
இதன்பின்னர் உள்ளே செல்லும் ஸ்ருதிஹாசன், போட்டியாளர்கள் மூவரிடம் நலம் விசாரித்துவிட்டு மூன்றாமிடம் லாஸ்லியாவுக்கு என சொல்லி அவரை கையோடு அழைத்து செல்கிறார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை லாஸ்லியா தான் வின்னர் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது திடீரென லாஸ்லியா வெளியே செல்வது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இதனையடுத்து வின்னர் முகினா? சாண்டியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்