பிக்பாஸ் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்துவிட்டது.
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பெரிய அளவில் பிரபலமாகிப் போனவர்கள் கவினும் லாஸ்லியாவும் தான். அவர்கள் காதல்தான் அவர்களை பைனல் வரை கொண்டு சென்றது.
அவர் பிக் பாஸ் வின்னராக வருவார் என்று பலரும் கூறிக் கொண்டிருக்க, குடும்ப சூழ்நிலையின் காரணமாக ஐந்து லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது கவினின் அம்மா மற்றும் பாட்டி சீட்டு மோசடி வழக்கில் 7 வருடம் சிறை தண்டனை பெற்று உள்ளே சென்றனர்.
வெளியே வந்த கவின், 5 லட்சம் பணத்தினைக் கொண்டு ஏமாற்றப்பட்டவர்களுக்கு பணத்தினை திருப்பி கொடுத்துள்ளார். மேலும், அம்மா மற்றும் பாட்டியை ஜெயிலில் இருந்து வெளியே எடுத்துள்ளார்.
தற்போது கவின் தன்னுடைய அம்மா மற்றும் பாட்டியுடன் வீட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட பலரும் இவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.