விஜய் நடிப்பில் சில வருடங்கள் முன்பு தெறி படம் வெளிவந்தது. இப்படத்தில் விஜய், சமந்தா உட்பட பலர் இயக்குனர் மகேந்திரன் வில்லனாக அவதாரம் எடுத்திருந்தார்.
இப்படம் தமிழில் நல்ல வெற்றி பெற்றது இப்படம் சத்ரியன் படத்தின் உல்டா என சொல்லப்பட்டாலும் அக்காட்சிகள் எதுவும் தெரியாத அளவு சிறப்பான திரைக்கதையை உருவாக்கி படமாக்கி இருந்தார் அட்லி.
இப்படம் சில வருடங்களுக்கு பிறகு அதே கதையை தழுவி ரத்னாகர் என்ற பெயரில் அஸ்ஸாமிய மொழியில் எடுக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இப்படம் கடந்த ஒரு வாரமாக ஹவுஸ் ஃபுல்லாம்.
ஜதின் ஓரா என்ற அஸ்ஸாம் சூப்பர் ஸ்டார் நடிகர் நடித்துள்ளார். இதில் ஒரு மாற்றம் என்னவென்றால் விஜய் நடித்த காவல் அதிகாரி வேடத்தை ரவுடி வேடமாக மாற்றியுள்ளனராம்