சூப்பர் சிங்கர் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் பிரபல நடிகை

By Staff

Published:

bbb133d68adb14036ab2b9c2f1a3e519

சமீபத்தில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மூக்குத்தி முருகன் முதல் பரிசை வென்றார். அவருக்கு ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள வீடு, அனிருத் இசையில் பாட வாய்ப்பு கிடைத்தது. இரண்டாவது பரிசை விக்ரமும் மூன்றாவது பரிசை புன்யா மற்றும் சாம் விஷால் ஆகிய இருவருக்கும்

இந்த நிலையில் இந்த முடிவுகள் குறித்து பிரபல நடிகை ஸ்ரீபிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்திருந்தார். அவர் இதுகுறித்து கூறியதாவது: “விஜய் டிவி தொழில்நுட்ப ரீதியாக உயர்ந்த ஒரு போட்டியாளருக்கு சூப்பர் சிங்கர் டைட்டில் ஒருபோதும் வழங்கப்படுவதில்லை என்று நான் நம்புகிறேன். நம்பிக்கை புன்யாவும் விக்ரமும் சங்கீத ரீதியாக புத்திசாலிகள். சத்யபிரகாஷ்க்கு டைட்டில் கொடுக்காத போதே இந்த போங்கு ஆரம்பித்து விட்டது. எப்போதாவது நியாயமாக சங்கீதத்தை மட்டும் கௌரவிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பார்கிறேன்” என்று கூறியிருந்தார்.

4598c901086115fececee9ead2f09cce

ஸ்ரீப்ரியாவின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ஸ்ரீப்ரியா மன்னிப்பு கேட்டு தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: விஜய் டிவி சூப்பர் சிங்கர் குறித்த எனது கருத்தில், என் நினைவு தப்பியதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். . மன்னித்து விடுங்கள் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment