தேனிசை தென்றல் தேவாவின் பிறந்த நாள் பதிவு

By Staff

Published:

ஆரங்கம் தானுறங்க , நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க என்ற நல்ல பாடல்களின் மூலம் மனசுக்கேத்த மகாராசா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தேவா. இவரது இரண்டாவது படமான வைகாசி பொறந்தாச்சு படத்தின் வரலாறு காணாத ஹிட் கதாநாயகன் பிரசாந்துக்கு மட்டுமல்லாது தேவாவுக்கும் மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.

7452ce5c8e805ccb6d9e30d77ceef56b

தொடர்ந்து அனைத்து நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்கும் வாய்ப்பு இவரை தேடி வந்தது. அப்போதைய நேரத்தில் கவிதாலயா நிறுவனம் தயாரித்த அண்ணாமலை படத்துக்கு தேவாதான் இசையமைப்பு பாடல்கள் தாளம் போட வைத்தாலும் படம் துவங்கும்போது ரஜினி பெயரை டைட்டிலில் போடும்போது இவர் இசைத்த பின்னணி இசை பின்னாட்களில் வந்த எல்லா படங்களுக்கும் அதுவே அடையாளமாகி போனது. அந்த பின்னணி இசை மிகப்பிரபலமான ஜேம்ஸ்பாண்ட் பட மியூசிக்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை அதை லாவகமாக தேவா மாற்றி அடித்திருக்கும் முறைதான் நம்மை பரவசப்படவைக்கிறது.

தேவா காப்பி கேட் இசையமைப்பாளர் என்று தமிழ் சினிமாவில் சிலரால் அடையாளப்படுத்தப்படுவார். காப்பி கேட் என்றாலும் இவரது பாணியில் கொஞ்சம் மாற்றி தமிழ் சூழலுக்கேற்ப அந்த பாடலை இசையை இனிமையாக கொடுத்தவர்தான் தேவா.

ரஜினியின் அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம், உள்ளிட்ட பல படங்களுக்கு தேவாதான் இசை. இதில் ரஜினியின் பாட்ஷா படம் தாறுமாறு ஹிட்டுக்கு தேவாவின் இசை ஒரு முக்கிய காரணம்.

இப்போது இருக்கும் முன்னணி நடிகர்களான அஜீத், விஜய்யின் ஆரம்பகால படங்களான காதல்கோட்டை, வாலி, ஆசை, பிரியமுடன், நேருக்கு நேர் உள்ளிட்ட பல படங்களின் வெற்றிக்கு தேவாவின் இசையும் பாடலும் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

கானா பாடல்களை அதிகம் பாடியும் இசையமைத்தும் இருப்பவர் தேவாதான்.

பல இனிமையான பாடல்களை நமக்களித்த இசையமைப்பாளர் தேவாவுக்கு உதவிகரமாக இருந்தவர்கள் அவரின் உடன் பிறந்த சகோதரர்கள் சபேஷ் முரளி இருவருமாவர். இவர்கள் அண்ணன் தேவாவுக்கு இசைக்கோர்ப்பில் அதிகம் உதவி செய்து இருப்பர்.

கடந்த சில வருடங்களாக தேவா அதிகம் படங்களில் இசையமைப்பதில்லை தமிழ் நாடு அரசு இயல் இசை நாடகமன்றத்தில் பொறுப்பில் உள்ளார்.

இன்று இசையமைப்பாளர் தேவாவுக்கு பிறந்த நாள் நம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்

Leave a Comment