மீனா, கீர்த்தி சுரேஷை அடுத்து குஷ்பு: ‘தலைவர் 168’ படத்தில் இன்னும் யாரெல்லாம்?

By Staff

Published:

90c0af46899a1791da2d529b551550af

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனாவும் மகளாக கீர்த்தி சுரேஷும் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் திடீரென இந்த படத்தில் நடிகை குஷ்புவும் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீனா, குஷ்பு ஆகிய இருவரும் ரஜினியுடன் 24 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கீர்த்தி சுரேஷ் முதன்முதலாக ரஜினி படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினிகாந்த் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி என ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே இந்த படத்தில் இடம் பெற்று உள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

Leave a Comment